Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தமிழக மக்கள் அன்பு எப்படிபட்டது தெரியுமா?.. கடைசி போட்டிக்குப் பின் நெகிழ்ந்த தோனி!!

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தன் கடைசி லீக் போட்டியை ஆடி முடித்துள்ளது.

நேற்று நடந்த அந்தப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் சென்னை அதன் சொந்த மைதானத்தில் நடந்த ஏழு போட்டிகளில், ஆறு வெற்றிகள் பெற்றுள்ளது.

மிகப்பெரிய பெயர்

மிகப்பெரிய பெயர்

போட்டிக்குப் பின் பேசிய தோனி, தமிழக மக்கள் தனக்கு கொடுத்த அடையாளப் பெயரான "தல" குறித்து பேசினார். "இது போன்ற பெயர் கிடைப்பது எப்போதும் சிறப்பானது. இந்த மிகப்பெரிய பெயரை எனக்கு அவர்கள் அளித்துள்ளார்கள். சிஎஸ்கே அணியின் பாடலில் இந்தப் பெயர் இடம் பெற்றது முதலில் எனக்கு தெரியாது" என்றார்.

மக்களின் அன்பு

மக்களின் அன்பு

"நான் எந்தளவு தமிழ்நாடு மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளேன் என்றால், அவர்கள் எப்போது என்னைப் பார்த்தாலும் என் பெயரை சொல்லி அழைக்க மாட்டார்கள். தல என்று தான் அழைப்பார்கள். அது மிகவும் சிறப்பான உணர்வு. அவர்கள் எப்போதும் என்னை மட்டுமல்ல, மொத்த அணியையும் சேர்த்தே ஆதரித்தார்கள்" என நெகிழ்ந்தார் தோனி.

சின்ன தல ரெய்னா

சின்ன தல ரெய்னா

தோனியை தல என்று அழைப்பது போல, துணை கேப்டன் ரெய்னாவை சின்ன தல என அழைத்து வருகிறார்கள் சிஎஸ்கே ரசிகர்கள். டெல்லி அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ரெய்னா 37 பந்துகளில் 59 ரன்கள் குவித்து அசத்தினார்.

மின்னல் வேக ஸ்டம்பிங்

மின்னல் வேக ஸ்டம்பிங்

அதே போல, தோனி இரண்டு மின்னல் வேக ஸ்டம்பிங், 22 பந்துகளில் 44 ரன்கள் குவிப்பு என வெற்றியில் முக்கிய பங்காற்றினார். இம்ரான் தாஹிர் 4, ஜடேஜா 3 விக்கெட்கள் வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, May 2, 2019, 13:28 [IST]
Other articles published on May 2, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+