Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யப்பா முடியல.. இஸ்கூல் பசங்க மாதிரி காமெடி செய்த வாட்சன் - டு ப்ளேசிஸ்! குட்டையைக் குழப்பிய டெல்லி!!

Recommended Video

IPL 2019:Chennai vs Delhi | காமெடி செய்த வாட்சன் - டு ப்ளேசிஸ்! குட்டையைக் குழப்பிய டெல்லி!

விசாகப்பட்டினம் : சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இடையே ஆன இரண்டாவது தகுதிப் போட்டியில் சென்னை அணியின் துவக்க வீரர்கள் வாட்சன் - டு ப்ளேசிஸ் அபாரமாக பேட்டிங் செய்தனர்.

ஆனால், அவர்கள் முதல் ரன்னை எடுக்க செய்த காமெடி இந்த ஆண்டு ஐபிஎல்-இன் சிறந்த காமெடியாக மாறியது.

அவர்கள் செய்த காமெடியை காட்டிலும், டெல்லி அணி பீல்டிங்கில் குழம்பியது பெரும் காமெடியாக இருந்தது. என்ன நடந்தது?

அந்த பந்து

அந்த பந்து

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 147 ரன்கள் எடுத்தது. அடுத்து சேஸிங் செய்ய வந்தனர் சென்னை அணியின் டு ப்ளேசிஸ் - ஷேன் வாட்சன். டு ப்ளேசிஸ் முதல் ஓவரின் மூன்றாவது பந்தை சந்தித்தார்.

பின் வாங்கினார்

பின் வாங்கினார்

பந்தை பாயின்ட் திசையில் தட்டி விட்ட டு ப்ளேசிஸ், ரன் ஓட முயற்சித்தார். ஆனால், பந்தை பீல்டர் எடுத்து விட்டதை பார்த்த அவர் திரும்பி ஓட முயற்சி செய்தார். இதே நேரத்தில், வாட்சன் பாதி தூரம் ஓடி வந்த பின், டு ப்ளேசிஸ் பின்வாங்குவதை பார்த்து தானும் பின் வாங்கி ஓடினார்.

பேட்ஸ்மேன் குழப்பம்

பேட்ஸ்மேன் குழப்பம்

வாட்சன் பாதி தூரம் தாண்டி விட்டதை, கண்டு டு ப்ளேசிஸ் மீண்டும் முன்னே ஓட ஒரு ஓடி எடுத்து வைத்தார். பின் மீண்டும் வாட்சன் திரும்பி ஓடுவதை பார்த்து, தானும் திரும்பி ஓடினார். (யப்பா.. சாமி.. முடியலை!!) இவை எல்லாம் சில வினாடி நேரத்தில் நடைபெற்றது.

சிறுவர்கள் போல..

சிறுவர்கள் போல..

இரண்டு அனுபவ பேட்ஸ்மேன்களும் பள்ளிக்கூட சிறுவர்கள் போல நடந்து கொண்டது ஒருபுறம் என்றால், இந்த குழப்பத்தை பயன்படுத்தி விக்கெட் எடுத்திருக்க வேண்டிய டெல்லி அணியின் பீல்டர்கள் மொத்தமாக சேர்ந்து குழப்பினர்.

குழம்பிய ரிஷப் பண்ட்

குழம்பிய ரிஷப் பண்ட்

பந்தை எடுத்த பீல்டர், பந்துவீச்சாளர் திசைக்கு பந்தை அனுப்பினார். டு ப்ளேசிஸ் எல்லைக் கோட்டுக்கு அருகே வந்த நிலையில், பந்துவீச்சாளர் முனையில் பந்தை பிடித்த ஒருவர், அதை விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் வசம் வீசினார். பேட்ஸ்மேன்கள் குழப்பத்தின் இடையே, ரிஷப் பண்ட் பந்தை பிடிக்க தவறி கோட்டை விட்டார். அதற்குள் வாட்சன் ஒரு ரன்னை ஓடி முடித்தார்.

அரைசதம்

அரைசதம்

பின்னர், பவுண்டரி நோக்கி ஓடிய பந்தை இஷாந்த் சர்மா பீல்டிங் செய்து, குழப்பத்தை முடித்து வைத்தார். இப்படித்தான் இந்தப் போட்டியில் வாட்சன் - டு ப்ளேசிஸ் ஜோடி தன் முதல் ரன்னை எடுத்தது. பின்னர், இருவரும் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தனர்.

Story first published: Friday, May 10, 2019, 23:34 [IST]
Other articles published on May 10, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+