Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி இருக்கும் போது.. ஒரு செகண்டு காலை தூக்குனா.. அவ்ளோதான்.. வேணும்னா கால்ல பசையை தடவிட்டு வாங்க!!

சென்னை : டெல்லி கேபிடல்ஸ் அணியை பரிதாப நிலையில் தோல்வியடையச் செய்தது தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ்.

இந்தப் போட்டியில் ஒரே ஓவரில் இரண்டு ஸ்டம்பிங் செய்து தோனி மிரள வைத்தார். உண்மையிலேயே இந்த மாதிரி ஸ்டம்பிங்-களை யாராலும் செய்ய முடியாது என்ற அளவுக்கு இருந்தது.

ஒரு வினாடியில்..

ஒரு வினாடியில்..

12வது ஓவரில் ஜடேஜா பந்து வீசி வந்தார். அந்த ஓவரில் முதலில் கிறிஸ் மோரிஸ் ஜடேஜாவின் பந்துவீச்சை கணிக்கத் தவறினார். பந்து விக்கெட் கீப்பர் தோனி வசம் சென்றது. மோரிஸ் தன் காலை லேசாக ஒரு இன்ச் உயரத்துக்கு, ஒரு வினாடி நேரத்துக்கு தூக்கினார்.

கண் இமைக்கும் நேரம்

கண் இமைக்கும் நேரம்

அந்த கண் இமைக்கும் நேரத்திற்குள் ஸ்டம்பிங் செய்தார் தோனி. பலரும் பேட்ஸ்மேன் கிரீஸ்-க்குள் தானே நிற்கிறார். இது அவுட்டாக இருக்காது என்றே எண்ணினர். ஆனால், தோனி குறி பார்த்து பேட்ஸ்மேன் காலை தூக்கிய கணத்தில், பெயில்சை தகர்த்து, ஸ்டம்பிங் செய்தார்.

ஸ்ரேயாஸ் ஐயர் சிக்கினார்

ஸ்ரேயாஸ் ஐயர் சிக்கினார்

இந்த விக்கெட் விழுந்த அடுத்த இரண்டு பந்துகளில் அதுவரை பொறுப்பாக பேட்டிங் செய்து வந்த டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தோனியிடம் சிக்கினார். இந்த முறையும் மோரிஸுக்கு நடந்தது போலவே, தான் நடந்தது.

வினாடிக்கும் குறைவு

ஆனால், ஸ்ரேயாஸ் ஐயர் காலை தூக்கிய நேரம் ஒரு வினாடிக்கும் குறைவானது. இந்த முறையும் தோனி சரியாக காலை தூக்கிய அந்த குறைவான நேரத்தில் பெயில்சை தகர்த்து ஸ்டம்பிங் செய்தார்.

பசையோடு வாங்க!

ஒரே ஓவரில் தோனியின் இரண்டு சிறந்த ஸ்டம்பிங் நிகழ்ந்ததால், ரசிகர்கள் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றனர். சமூக வலைதளத்தில் ஒருவர் இப்படி குறிப்பிட்டுள்ளார். "தோனி ஸ்டம்ப்புக்கு பின்னே இருக்கும் போது, பேட்ஸ்மேன் பசையை தடவிக் கொண்டு தான் வரவேண்டும்" என கூறி இருந்தார்.

Story first published: Thursday, May 2, 2019, 12:25 [IST]
Other articles published on May 2, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+