Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சின்னபுள்ளத்தனமா இல்லை.. இப்படி பண்ணா எப்படி டீம்ல எடுப்பாங்க.. ரெய்னாவிடம் வம்பு செய்த ரிஷப் பண்ட்!

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் மோதிய போட்டியில் டெல்லி அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், சுரேஷ் ரெய்னாவிடம் "சின்னப்புள்ளத்தனமான" காரியம் செய்தார்.

அதை உதாரணமாக காட்டி, அவருக்கு ஏன் உலகக்கோப்பை அணியில் இடம் கிடைக்கவில்லை என ரசிகர்கள் சுட்டிக் காட்டி வருகிறார்கள்.

இடத்தை இழந்தார்

இடத்தை இழந்தார்

இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்த ரிஷப் பண்ட்டுக்கு இந்திய உலகக்கோப்பை அணியில் இடம் கிடைக்கவில்லை. மூத்த, அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக்கிடம் தன் இடத்தை இழந்தார் ரிஷப் பண்ட்.

ஐபிஎல்-இல் ரிஷப் பண்ட்

எனினும், ஐபிஎல் தொடரில் தொடர்ந்து ஆடி வருகிறார். சில போட்டிகளில் ரன் குவிக்கும் ரிஷப் பண்ட் பல போட்டிகளில் சொதப்பி வருகிறார். விக்கெட் கீப்பிங் ஓரளவு சிறப்பாக இருக்கிறது.

குறுக்கே நின்றார்

குறுக்கே நின்றார்

இந்த நிலையில், சென்னை அணிக்கு எதிரான போட்டியில் இடைவேளை முடிந்து சுரேஷ் ரெய்னா பேட்டிங் செய்ய கிரீஸ்-க்கு சென்ற போது அவருக்கு முன், குறுக்கே நின்று கொண்டார் ரிஷப் பண்ட்.

இது காமெடியா?

இது காமெடியா?

தன் முதுகை காட்டிக் கொண்டு, கையையும் கட்டிக் கொண்டு, சின்னப் பையனை போல ரெய்னாவுக்கு வழி விடாமல் நின்று கொண்டிருந்தார். ரெய்னா நகரும் போது அவரும் நகர்ந்து காமெடி என்ற பெயரில் என்னவோ செய்தார்.

முதிர்ச்சி இல்லை

முதிர்ச்சி இல்லை

பின் ஒரு வழியாக போராடி ரெய்னா கிரீஸ்-க்கு வந்து நின்றார். இந்த வீடியோ ஐபிஎல் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி இருக்கிறது. அதற்கு கீழே, ரசிகர்கள் இது போன்ற முதிர்ச்சி இல்லாமல், சின்னப்புள்ளத்தனமாக ரிஷப் பண்ட் நடந்து கொள்வதால் தான் உலகக்கோப்பை அணியில் இடம் கிடைக்கவில்லை என கூறி வருகின்றனர்.

குழந்தை

"குழந்தைகளுக்கு உலகக்கோப்பையில் இடம் இல்லை. அடுத்த உலகக்கோப்பையில் நிச்சயம் இடம் கிடைக்கும்" எனக் கூறி கேலி செய்துள்ளார் ஒருவர்.

இரண்டிலும் முதிர்ச்சி இல்லை

ரிஷப் பண்ட்டிற்கு பேட்டிங், விக்கெட் கீப்பிங் இரண்டிலும் முதிர்ச்சி போதவில்லை என்கிறார் மற்றொருவர்.

Story first published: Wednesday, May 1, 2019, 23:44 [IST]
Other articles published on May 1, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+