Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோஹித்துக்கு இந்திய அணி மேல் இருக்குற அக்கறை கேப்டன் கோலி, அம்பதி ராயுடுவுக்கு இல்லையே!

சென்னை : ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.

இந்த போட்டியில் இரு அணிகளிலும் ஒரு ஆச்சரியமாக இந்திய அணியில் மூன்றாம் மற்றும் நான்காம் இடத்தில் இறங்கி வந்த இரு இந்திய வீரர்கள் துவக்க வீரர்களாக களம் இறங்கினர்.

இடம் மாறிய கோலி

இடம் மாறிய கோலி

பெங்களூர் அணியின் கேப்டன் கோலி, அந்த அணிக்கு துவக்கம் அளிக்க முடிவு செய்தார். கேப்டன் கோலி இந்திய ஒருநாள் அணியில் மூன்றாம் இடத்தில் களம் இறங்கி வருகிறார்.

அம்பதி ராயுடு நிலை

அம்பதி ராயுடு நிலை

அதே போல, அம்பதி ராயுடு இந்திய ஒருநாள் அணியில் நான்காம் இடத்தில் களமிறங்கி வந்தார். அவர் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் துவக்க வீரராக இறங்கினார். பின்னர் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரின் கடைசி இரு போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

பேட்டிங் வரிசை

பேட்டிங் வரிசை

ஐபிஎல் தொடருக்கு பின் உலகக்கோப்பை நடைபெற உள்ளதால், இந்திய வீரர்கள் அனைவரும் இந்திய அணியில் தாங்கள் பேட்டிங் செய்யும் அதே வரிசையில் இறங்குவர் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ரோஹித் சர்மா முடிவு

ரோஹித் சர்மா முடிவு

ரோஹித் சர்மா தான் மும்பை இந்தியன்ஸ் அணியில் துவக்க வீரராகத் தான் இறங்கப் போகிறேன். ஐபிஎல் தொடரில் வெல்வது என்பதோடு, உலகக்கோப்பையையும் குறி வைத்து அவ்வாறு முடிவு செய்தார்.

துவக்க வீரராக ராயுடு

துவக்க வீரராக ராயுடு

அதே போல, அம்பதி ராயுடு மிடில் ஆர்டரில் ஆடுவார் என எதிர்பார்த்த நிலையில், துவக்க வீரராக களம் இறங்கி உள்ளார். ராயுடு கடந்த ஐபிஎல் தொடரில் துவக்க வீரராக களம் இறங்கி உள்ளார்.

மிடில் ஆர்டரில்..

மிடில் ஆர்டரில்..

எனினும், அவர் இந்திய அணியில் தன் இடம் ஊசலாடுவதால் ஐபிஎல் தொடரில் மிடில் ஆர்டரில் ஆடி, தன்னால் மிடில் ஆர்டரில் ரன் குவிக்க முடியும் என நிரூபிப்பார் என நினைத்திருந்த நிலையில், முதல் ஐபிஎல் போட்டியில் துவக்க வீரராக இறங்கி உள்ளார்.

அக்கறை இல்லையே

அக்கறை இல்லையே

கோலி ஐபிஎல் தொடரில் எந்த இடத்தில் இறங்கினாலும் யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை என்பதால் துவக்க வீரராக இறங்கி உள்ளார். என்ன இருந்தாலும், ரோஹித் சர்மாவிற்கு இருக்கும் அக்கறை இவர்களுக்கு இல்லையோ என எண்ணத் தோன்றுகிறது.

இது வேறா!?

இது வேறா!?

அதே சமயம், ஐபிஎல் என்பது வேறு, உலகக்கோப்பை வேறு என்ற எண்ணமும் வருகிறது. எப்படியோ, ஐபிஎல் தொடரில் பார்ம் இழக்காமல் ரன் குவித்தால் சரி தான்.

Story first published: Saturday, March 23, 2019, 21:58 [IST]
Other articles published on Mar 23, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+