CSK vs RCB : கோலி அணியை சுருட்டி வீசிய தோனி.. முதல் போட்டியில் சிஎஸ்கே அபார வெற்றி!!
சென்னை : 2019 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சென்னை அணி, பெங்களூர் அணியை பந்துவீச்சில் சுருட்டி வீசி, அபார வெற்றி பெற்றது.
பெரும் எதிர்ப்பார்ப்புக்கு இடையே நடைபெற்ற இந்த போட்டியில் எந்த அணி வெற்றியுடன் தொடரைத் துவக்கும் என்ற கேள்வி இருந்தது. ராசியில்லாத பெங்களூர் அணி இந்த சீசனில் தலையெழுத்தை மாற்றுமா என்ற கேள்வி இருந்தது. ஆனால், அந்த அணி முதல் போட்டியிலேயே தோல்வியை நோக்கி பயணித்தது. அணி விவரம் மற்றும் போட்டி விவரம்.

சென்னை அணி
அம்பதி ராயுடு, ஷேன் வாட்சன், சுரேஷ் ரெய்னா, தோனி, கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, டிவைன் பிராவோ, தீபக் சாஹர், ஷர்துல் தாக்குர், ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர்

பெங்களூர் அணி விவரம்
பார்த்திவ் பட்டேல், கோலி, மொயீன் அலி, ஏபி டி வில்லியர்ஸ், ஷிம்ரான் ஹெட்மையர், ஷிவம் துபே, கோலின் டி கிராண்ட்ஹோம், உமேஷ் யாதவ், சாஹல், முஹம்மது சிராஜ், நவ்தீப் சைனி

பெங்களூர் பேட்டிங்
டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பெங்களூர் அணிக்கு கோலி மற்றும் பார்த்திவ் படேல் துவக்கம் அளித்தனர். சென்னை அணியின் ஹர்பஜன் சிங், கோலி, மொயீன் அலி, ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோரது விக்கெட்களை வீழ்த்தினார். அடுத்து இம்ரான் தாஹிர் 3, ஜடேஜா 2, பிராவோ 1 விக்கெட் என வீழ்த்த, பெங்களூர் அணி 17.1 ஓவர்கள் முடிவில் 70 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

சென்னை அணி பேட்டிங்
71 ரன்கள் என்ற மிகச் சிறிய இலக்கை நோக்கி சென்னை அணி ஆடியது. ஷேன் வாட்சன் 0, ரெய்னா 19, அம்பதி ராயுடு 28 ரன்களுக்கு வெளியறினர். இறுதியில் ஜடேஜா, ஜாதவ் அணியின் வெற்றியை உறுதி செய்தனர். 17.4 ஓவர்களில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Click it and Unblock the Notifications