Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஃபிளையிங் கிஸ் கொடுத்த வாட்சன்.. “சூப்பர் பேட்டிங்”.. பதில் சொன்ன ஜூனியர்.. வைரலாகும் புகைப்படம்!

Recommended Video

6 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபத்தை வீழ்த்தியது சென்னை

சென்னை : 2019 ஐபிஎல் தொடரியன் 41வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை அபாரமாக ஆடி வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் சென்னை அணியின் துவக்க வீரர் ஷேன் வாட்சன் அருமையாக பேட்டிங் செய்து கடின இலக்கை எளிதாக எட்ட உதவினார்.

டாப் ஆர்டர் நிலை

டாப் ஆர்டர் நிலை

முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 175 ரன்கள் குவித்தது. சென்னை அணியின் டாப் ஆர்டர் கடந்த சில போட்டிகளில் மோசமாக செயல்பட்டு வந்த நிலையில், எப்படி பெரிய இலக்கை எட்டப் போகிறார்கள் என்ற எண்ணம் நிலவியது.

வாட்சன் அதிரடி

வாட்சன் அதிரடி

எனினும், இந்தப் போட்டியில் ஷேன் வாட்சன் தன் பழைய பார்முக்கு திரும்பினார். அதிரடியாக ஆடிய வாட்சன் 53 பந்துகளில் 96 ரன்கள் குவித்தார். சதம் அடிக்கும் வாய்ப்பை வெறும் 4 ரன்களில் தவறவிட்டார்.

ஃபிளையிங் கிஸ்

எனினும், நடப்பு ஐபிஎல் தொடரில் தான் பார்முக்கு திரும்பியதில் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். ஆட்டமிழந்து வெளியே வந்த பின், பார்வையாளர்கள் பகுதியில் நின்றிருந்த தன் செல்ல மகனுக்கு "ஃபிளையிங் கிஸ்" கொடுத்தார் வாட்சன்.

ஜூனியர் வாட்சன்

ஜூனியர் வாட்சன்

பதிலுக்கு ஜூனியர் வாட்சன், கையை உயர்த்தி "சூப்பர் பேட்டிங்" என சைகை காட்டினார். இந்தப் புகைப்படங்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

Story first published: Wednesday, April 24, 2019, 11:28 [IST]
Other articles published on Apr 24, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+