Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி அடுத்த போட்டியில் ஆடுவது சந்தேகம்? அவர் இல்லாம ஜெயிக்க வேற மாட்டாங்களே..!!

சென்னை : 2019 ஐபிஎல் தொடரில் தோனி பேட்டிங் மற்றும் கேப்டன்சியில் செம பார்மில் இருக்கிறார். தற்போது காயத்தில் இருக்கும் தோனி அடுத்த போட்டியில் பங்கேற்பது சந்தேகத்தில் தான் உள்ளது. தோனி இல்லாத போட்டி என்னாகுமோ? என ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

ஏற்கனவே, நல்ல பந்துவீச்சாளர்களான பிராவோ, ஹர்பஜன் சிங் காயத்தில் உள்ளனர். அவர்கள் எந்த போட்டியில் அணிக்கு திரும்புவர் என்பது தெரியவில்லை.

முக்கிய வீரர்கள் விலகினர்

முக்கிய வீரர்கள் விலகினர்

லுங்கி நிகிடி, டேவிட் வில்லி ஆகியோர் அவர்கள் நாட்டிலேயே உள்ளனர். ஐபிஎல் தொடரில் இருந்து காயம் மற்றும் தனிப்பட்ட காரணங்களால் அவர்கள் விலகி உள்ளனர். இந்த நிலையில் அனுபவ சுழற் பந்துவீச்சாளர்கள் + அனுபவம் இல்லாத வேகப் பந்துவீச்சாளர்களை வைத்து போட்டிகளை வென்று வருகிறார் தோனி.

முதுகு வலி

முதுகு வலி

ஆனால், தோனிக்கு கடந்த சில நாட்கள் முன்பு முதுகு வலி ஏற்பட்டது. அதோடு போட்டிகளில் பங்கேற்று வந்த அவர், கடைசியாக நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போட்டியில் இருந்து விலகினார். முக்கிய பந்துவீச்சாளர்களும் இல்லாமல், அதை சமாளிக்கும் திறன் கொண்ட கேப்டன் தோனியும் இல்லாமல், அந்த போட்டியில் சென்னை படுதோல்வி அடைந்தது.

நம்பிக்கை

நம்பிக்கை

எனவே, ரசிகர்கள் தோனி எப்போது வருவார் என ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். சுரேஷ் ரெய்னா சென்னையின் அடுத்த போட்டியான பெங்களூர் போட்டியில் தோனி பங்கேற்க வாய்ப்புள்ளது என நம்பிக்கை தெரிவித்து இருந்தார்.

உறுதியில்லை

உறுதியில்லை

ஆனால், தற்போது வந்த செய்திகளை வைத்துப் பார்த்தால், தோனி ஆடுவது இன்னும் உறுதியில்லை என்றே தெரிகிறது. தோனி ஆடுவாரா, மாட்டாரா என அவர் தான் முடிவு செய்ய வேண்டும் என சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் கூறியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

ரசிகர்களின் கவலை

ரசிகர்களின் கவலை

எனவே, தோனி அடுத்த போட்டியில் களமிறங்குவது சந்தேகமே. ஒருவேளை தோனி ஆடாவிட்டால் சென்னை அணி தோற்று விடும் என சிஎஸ்கே ரசிகர்களே புலம்பி வருகிறார்கள். முதல் சந்திப்பில் பெங்களூர் அணியை 70 ரன்களில் சுருட்டி இருந்தது சென்னை. அதற்கு பழிவாங்க காத்துக் கொண்டுள்ளது பெங்களூர் அணி. இந்த நேரத்தில் தோனி இல்லையென்றால் என்ன ஆகுமோ என்பதே ரசிகர்களின் கவலை!

Story first published: Saturday, April 20, 2019, 22:49 [IST]
Other articles published on Apr 20, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+