அவர் வரப் போறாரு.. வந்துட்டாரு.. ஓவர் பில்டப் கொடுத்த பெங்களூர் டீம்! அவர் வந்தா எல்லாமே மாறிடுமா?
பெங்களூர் : 2019 ஐபிஎல் தொடரில் மிக மோசமாக செயல்பட்டு வரும் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர். அந்த அணி தான் ஆடிய முதல் ஆறு போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது.
இந்த நிலையில், தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன் பெங்களூர் அணியில் இணைய உள்ளதாக பயங்கர பில்டப்புக்குப் பின் அறிவித்துள்ளது பெங்களூர்.

மாற்று வீரர்
பெங்களூர் அணியின் வேகப் பந்துவீச்சாளர் நாதன் கோல்டர்நைல் காயமடைந்து ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி உள்ளார். அவருக்கு மாற்று வீரராக தென்னாப்பிரிக்க வீரர் டேல் ஸ்டெய்னை தேர்வு செய்துள்ளது பெங்களூர் அணி.

பில்டப்
இந்த அறிவிப்பை நேரடியாக வெளியிடாமல் பயங்கர பில்டப் செய்தது பெங்களூர் அணி. முதலில் ஸ்டெய்ன் தன் இன்ஸ்டாகிராம் கணக்கில் இந்திய விசா புகைப்படத்தை வெளியிட்டு, சின்ன ஆச்சரியம் என குறிப்பிட்டு இருந்தார்.
ரொம்ப நாளாச்சு
பின்னர், பெங்களூர் அணி தன் ட்விட்டர் கணக்கில் பார்த்து ரொம்ப நாளாச்சு.. என டேல் ஸ்டெய்ன் என்ற பெயரை எழுதி அதை தெளிவாக பார்க்க முடியாத வகையில் அடித்து இருந்தது.

தேர்வுக்கு காரணம்?
டேல் ஸ்டெய்ன் நீண்ட காலமாக காயம் காரணமாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கி இருந்துவிட்டு, கடந்த ஆண்டு மீண்டும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று ஆடி வருகிறார். அவரது முந்தைய மிரட்டல் பந்துவீச்சு இப்போது இல்லை என்றாலும், கடைசி ஓவர்களில் எதிரணிக்கு கடும் அழுத்தம் கொடுத்து வருகிறார். அதற்காகவே, பெங்களூர் அணி ஸ்டெய்னை தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications