Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன வார்னர் ஆட்டோல போறீங்க! அப்படியே போய் ஓட்டு போட்டுட்டு வந்துருங்க.. கலாய்த்த ரசிகர்கள்!!

Recommended Video

ஹைதராபாத்தில் ஆட்டோவில் சென்ற வார்னர்-வீடியோ

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அதிரடி வீரர் டேவிட் வார்னர் ஹைதராபாத் நகரில் தன் மகளுடன் ஆட்டோவில் பயணித்துள்ளார்.

அதைக் கண்டு ஹைதராபாத் ரசிகர்கள், அப்படியே எங்க ஊரு ஆளாவே மாறிட்டீங்களே என அவரை கொண்டாடி வருகிறார்கள்.

ஊர் சுற்றிய வார்னர்

டேவிட் வார்னர் ஹைதராபாத் அணிக்காக ரன் குவித்து முடித்த ஓய்வு நேரத்தில் தன் குடும்பத்துடன் ஹைதராபாத் நகரை சுற்றிப் பார்த்துள்ளார். ஊரைச் சுற்றிப் பார்க்க அவர் ஆட்டோவை தேர்வு செய்துள்ளார்.

பரவி வரும் வீடியோ

பரவி வரும் வீடியோ

மற்றொரு ஆட்டோவில் இருந்து வார்னர் மற்றும் அவர் மகள் பயணம் செய்வதை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோ ஹைதராபாத் ரசிகர்கள் இடையே வேகமாக பரவி வருகிறது.

வோட்டர் ஐடி

வோட்டர் ஐடி

சில ரசிகர்கள் என்ன வார்னர் ஆட்டோல ஊர் சுத்தி.. எங்க ஊர் ஆளாவே மாறிட்டீங்க.. அப்படியே வோட்டர் ஐடி வாங்கி ஓட்டு போட்டுட்டு வந்துருங்க என அவரை செல்லமாக கலாய்த்து வருகிறார்கள்.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

வார்னர் இந்த ஐபிஎல் சீசனில் உச்சகட்ட பார்மில் இருக்கிறார். இதுவரை 6 போட்டிகளில் 349 ரன்கள் குவித்துள்ள அவர் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் முதல் இடத்தில் இருக்கிறார். அவரது ஆட்டத்தில் ஒரு சதம், மூன்று அரைசதம் எடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, April 11, 2019, 22:37 [IST]
Other articles published on Apr 11, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+