கிறிஸ் கெயிலை அவுட் ஆக்குறதுக்கு என்ன பாடுபட வேண்டி இருக்கு! 2 பேர் சேர்ந்து பிடித்த கேட்ச்!
டெல்லி : 2019 ஐபிஎல் தொடரின் 37வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியின் கிறிஸ் கெயில் அதிரடியாக ஆடினார். அவர் விக்கெட்டை எடுக்க திணறியது டெல்லி அணி.

முதல் பந்தில் சிக்ஸர்
கிறிஸ் கெயில் அரைசதம் கடந்தும் அதிரடியாக ஆடி வந்தார். அப்போது 13வது ஓவரை சந்தீப் லாமிச்சான் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் அடித்தார் கெயில். அடுத்த பந்தையும் சிக்ஸ் அடிக்க முயன்றார் கெயில்.

பவுண்டரி அருகே..
பந்தை தூக்கி அடித்தார். பந்து பவுண்டரி கோட்டின் அருகே சென்ற போது, டெல்லி வீரர் கோலின் இங்கிராம் பந்தை பிடித்தார். ஆனால், பவுண்டரி கோட்டுக்கு மிக அருகே பந்தை பிடித்த அவரால், ஒற்றை காலால் நிற்க முடியாமல் தடுமாறினார்.

சாமர்த்தியம்
அப்போது சாமர்த்தியமாக செயல்பட்ட அவர் பந்தை சில அடி தூரம் தள்ளி இருந்த அக்சர் பட்டேலிடம் வீசி விட்டு பவுண்டரியை தாண்டி குதித்து விட்டார். அக்சர் பட்டேல் பந்தை பிடித்தார். இரண்டு வீரர்கள் இணைந்து சாமர்த்தியமாக செயல்பட்டு கேட்ச் பிடித்து கிறிஸ் கெயிலை வெளியேற்றினர்.

வேகம் குறைந்தது
கிறிஸ் கெயிலை வெளியேற்ற என்ன பாடுபட வேண்டி இருக்கு என டெல்லி அணி அலுத்துக் கொண்டாலும், கிறிஸ் கெயில் சென்ற பின் பஞ்சாப் அணியின் ரன் குவிக்கும் வேகம் குறைந்தது. பஞ்சாப் 163 ரன்கள் மட்டுமே சேர்த்தது. டெல்லி இந்த இலக்கை எட்டி வெற்றி பெற்றது.


Click it and Unblock the Notifications