Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அஸ்வினை இந்த அளவுக்கு யாராலும் கலாய்க்க முடியாது.. போட்டிக்கு நடுவே டான்ஸ் ஆடி பங்கம் செய்த தவான்!

Recommended Video

IPL 2019: ஒரே ஒரு அவுட்... சர்ச்சையில் சிக்கிய அஸ்வின்- வீடியோ

டெல்லி : 2019 ஐபிஎல் தொடரின் 37வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் அஸ்வின், தவானுக்கு "மன்கட்" அல்வா கொடுக்க முயன்றார். ஆனால், உஷாராக இருந்த தவான் விக்கெட்டை காப்பாற்றிக் கொண்டதோடு, அஸ்வினை செமையாக கலாய்த்தார்.

தவான் அரைசதம்

தவான் அரைசதம்

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 163 ரன்கள் குவித்தது. அடுத்து சேஸிங் செய்தது டெல்லி அணி. டெல்லி அணியின் துவக்க வீரர் தவான் அபாரமாக ஆடி அரைசதம் கடந்தார்.

அஸ்வின் எச்சரிக்கை

அஸ்வின் எச்சரிக்கை

அதன் பின், 13வது ஓவரில் அஸ்வின் பந்து வீசினார். அப்போது பந்துவீச்சாளர் முனையில் நின்றிருந்தார் தவான். பந்து வீச ஓடி வந்த அஸ்வின், அப்படியே நிறுத்தி, தவான் கிரீஸை விட்டு வெளியேறுகிறாரா என பார்த்தார்.

தலையை ஆட்டி..

தலையை ஆட்டி..

உஷாராக இருந்த தவான், பேட்டின் முனை கிரீஸ்-க்குள் இருப்பதை உறுதி செய்தார். பின்னர், அஸ்வின் மீண்டும் பந்து வீச தன் இடத்திற்கு சென்றார். அப்போது தவான், முட்டி போட்டு தலையை ஆட்டி அஸ்வினை கலாய்த்தார்.

டான்ஸ் ஆடி..

அது மட்டும் போதாது என முடிவு செய்த அவர், அஸ்வின் ஓடி வந்த போது குதித்து டான்ஸ் ஆடி அவரை கலாய்த்தார். சில ரசிகர்கள், "கடந்த போட்டியில் வெற்றி பெற்ற பின் அஸ்வின் பாங்க்ரா நடனம் ஆடினாரே.. அதைத் தான் தவான் கலாய்க்கிறார்" என கூறி வருகிறார்கள்.

சர்ச்சை

சர்ச்சை

அஸ்வின், ஐபிஎல் தொடரின் துவக்கத்தில் ராஜஸ்தான் வீரர் ஜோஸ் பட்லரை மன்கட் ரன் அவுட் செய்தார். அது பெரும் சர்ச்சை ஆனது. அஸ்வின் செய்தது தவறு என்பதே பலரின் கருத்தாக இருந்தது.

உஷார்

உஷார்

அதன் பின் பேட்ஸ்மேன்கள் உஷாராகி விட்டனர். மீண்டும், அதே போன்ற மன்கட் ரன் அவுட் செய்ய அஸ்வின் முயன்றார். ஆனால், தவான் அவரை இதுவரை செய்யாத அளவு கலாய்த்து அனுப்பிவிட்டார். இந்தப் போட்டியில் டெல்லி அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Story first published: Sunday, April 21, 2019, 10:17 [IST]
Other articles published on Apr 21, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+