Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதுல என்னை அடிச்சுக்க ஆளே இல்லை.. இதோட 9 ஆச்சு! தன்னைத் தானே கலாய்த்துக் கொண்ட கோலி!

டெல்லி : 2019 ஐபிஎல் தொடரிலும் பெங்களூர் அணி பிளே-ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்தது. டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான 46வது லீக் போட்டியில் பெங்களூர் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து இருந்தது.

ஆனால், போட்டிக்கு முன்னதாக ஒரு தோல்வியை சந்தித்தார் கோலி. டாஸுக்கும், கோலிக்கும் ராசியில்லை என்பதை பல தொடர்களில் நாம் கண்டுவிட்ட நிலையில், இந்தப் போட்டியிலும் டாஸில் தோல்வியை சந்தித்தார் கோலி.

9 முறை

9 முறை

இந்தா டாஸ் தோல்வியுடன் சேர்த்து, 2019 ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் 9 முறை டாஸில் தோல்வியை சந்தித்துள்ளார் பெங்களூர் அணியின் கேப்டன் கோலி. இந்த முறை டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்ற பின் மைக்கில் பேசிக் கொண்டு இருந்தார்.

அடிச்சுக்க ஆளே இல்லை

அப்போது, கோலி திரும்பி தன் அணியினரை பார்த்து, ஒன்பது விரல்களை காட்டி, முஷ்டியை மடக்கி வீரம் காட்டினார். "ஒன்பதாவது டாஸ் தோல்வி. இதுல என்னை அடிச்சுக்க ஆளே இல்லை" என சைகை காட்டி இருப்பார் போல.

செம ஜாலி

செம ஜாலி

இதைக் கண்ட ரசிகர்கள் "என்னடா கோலி செம ஜாலி மூடில் இருக்கிறார். எப்போதும் ஆக்ரோஷமாக தானே இருப்பார்" என எண்ணி ஆச்சரியப்பட்டனர். சிலர் இதை இணையத்தில் பகிர்ந்து சிலாகித்து வருகின்றனர்.

போட்டியும் போச்சு

போட்டியும் போச்சு

டாஸில் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 187 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய பெங்களூர் அணி 171 ரன்கள் மட்டுமே எடுத்து, 16 ரன்களில் தோல்வி அடைந்தது. டாஸும் போச்சு.. போட்டியும் போச்சு!!

பிளே-ஆஃப் வாய்ப்பு

பிளே-ஆஃப் வாய்ப்பு

இந்த தோல்வியை அடுத்து பிளே-ஆஃப் செல்லும் வாய்ப்பை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நழுவ விட்டுள்ளது பெங்களூர் அணி. அந்த பெருமையும் கேப்டன் கோலியையே சாரும்.

Story first published: Sunday, April 28, 2019, 22:54 [IST]
Other articles published on Apr 28, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+