Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பேசாம அந்த டீமை விட்டு வெளியே வந்துருங்க.. எங்களால தாங்க முடியலை.. ஃபீல் பண்ணும் கோலி ரசிகர்கள்!!

டெல்லி : 2019 ஐபிஎல் தொடரின் பிளே-ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி.

கடந்த இரு சீசன்களாக பிளே-ஆஃப் செல்லாமல் விமர்சனத்துக்கு உள்ளான அந்த அணி, இந்த ஆண்டும் பிளே-ஆஃப் வாய்ப்பை தவற விட்டுள்ளது. மேலும் மோசமான சாதனை ஒன்றை செய்துள்ளது பெங்களூர்.

100 தோல்விகள்

100 தோல்விகள்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 100 டி20 போட்டிகளில் தோல்வி அடைந்து பரிதாபத்தை சந்தித்துள்ளது. இதில், மேலும் சோகம் என்னவென்றால் அந்த நூறு தோல்விகளில், கோலி 90 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

கோலி காரணமா?

கோலி காரணமா?

அப்படி என்றால் கோலி அந்த தோல்விகளுக்கு காரணமா? என்றால் ஒரு வீரராக கோலி காரணம் இல்லை. ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார் அவர். அப்படி இருக்கும் போது ஒரு வீரராக அவர் எந்த வகையிலும் இந்த தோல்விகளுக்கு காரணம் இல்லை.

பலவித முயற்சி

பலவித முயற்சி

அவரது கேப்டன்சி விமர்சனத்துக்கு உள்ளனாலும், அவர் பலவித முயற்சிகளையும் செய்து பார்த்துவிட்டார். பெங்களூர் அணி பல சீசன்களில் பல்வேறு வீரர்களை மாற்றிப் பார்த்தும் ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை.

பிளே-ஆஃப்பில் டெல்லி

பிளே-ஆஃப்பில் டெல்லி

இதில் மற்றொரு சோகம் என்னவென்றால், கடந்த ஆறு ஆண்டுகளாக பிளே-ஆஃப் செல்லாத டெல்லி அணி கூட தேவையான மாற்றங்களை செய்து, இந்த ஆண்டு பிளே-ஆஃப் சென்று காட்டிவிட்டது. இதனால், "டெல்லிக்கு நாங்க எவ்வளவோ பரவாயில்லை" என கடந்த சீசன்கள் போல மனதை தேற்றிக் கொள்ளும் வாய்ப்பும் பெங்களூர் ரசிகர்களுக்கு இப்போது இல்லை.

விரக்தியில் ரசிகர்கள்

விரக்தியில் ரசிகர்கள்

அதனால், கடும் விரக்தியில் இருக்கும் கோலி ரசிகர்கள், விராட் கோலி பேசாமல் பெங்களூர் அணியை விட்டு விலகி விடலாம் என கூறி வருகிறார்கள். ஆனால், இது நடக்க வாய்ப்பில்லை என்பதே உண்மை. ஒரு மாறுதலுக்கு கேப்டனை மாற்றிப் பார்க்கலாம்.

Story first published: Monday, April 29, 2019, 15:35 [IST]
Other articles published on Apr 29, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+