
விக்கெட் சரிவு
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பெரும் விக்கெட் சரிவை சந்தித்தது. 30 ரங்களுக்குள் 4 விக்கெட்களை இழந்து தடுமாறி வந்தது. அப்போது பேட்டிங் செய்ய ஆறாவது வீரராக களமிறங்கினார் ரியான் பராக்.

நிலைத்த ஆட்டம்
மற்ற ராஜஸ்தான் வீரர்கள் யாரும் 15 ரன்களை தாண்டவில்லை. ஏழு வீரர்கள் ஒற்றை இலக்க ரங்களில் ஆட்டமிழந்தனர். அதை பற்றி எல்லாம் கவலைப்படவில்லை பராக். நிலைத்து நின்று ஆடிய பராக் 47 பந்துகளில் அரைசதம் கடந்தார். 50 ரங்களில் ஆட்டமிழந்தார்.

இளம் வயதில் அரைசதம்
இதன் மூலம் ஐபிஎல் தொடரில் இளம் வயதில் அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார் 17 வயது, 175 நாட்களான ரியான் பராக் . இதற்கு முன் அதே ராஜஸ்தான் அணியை சேர்ந்த சஞ்சு சாம்சன் 18 வயதில் அரைசதம் அடித்து இருந்த சாதனையை தான் முறியடித்துள்ளார் இந்த இளம் வீரர்.

வடை போச்சே
இவர் அடித்த அரைசதத்தால் , ராஜஸ்தான் அணியின் கௌரவம் காப்பாற்றப்பட்டு, 115 ரன்களை எடுத்து அந்த அணி. டெல்லி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணி இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததால், பிளே -ஆஃ ப் செல்லும் வாய்ப்பை இழந்தது.

எதிர்கால வீரர் பராக்!!
தொடரில் தோல்வி அடைந்தாலும், இந்திய அணிக்கு ஒரு எதிர்கால வீரரை அடையாளம் காட்டியுள்ளது ராஜஸ்தான். ரியான் பராக் இந்த ஐபிஎல் தொடரில் இரண்டு முறை அரைசதத்துக்கு அருகே வந்து 47 ரங்களில் ஆட்டமிழந்தார். கடைசியாக ஒரு அரைசதமும் அடித்துள்ளார். பலரும் இந்திய அணியில் விரைவில் ரியான் பராக்கை பார்க்கலாம் என கூறி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications