For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அந்த 2 முன்னாள் கேப்டன்களும் சேர்ந்து எங்க டீமையே மாத்திட்டாங்க.. புகழ்ந்து தள்ளிய தவான்!!

டெல்லி : டெல்லி கேபிடல்ஸ் அணி ஆறு ஆண்டுகளுக்குப் பின் ஐபிஎல் தொடரில் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்த வெற்றிக்கு என்ன காரணம் என பல கிரிக்கெட் விமர்சகர்களும் அலசி, ஆராய்ந்து வருகின்றனர். இந்த நிலையில் தங்கள் அணியின் வெற்றிக்கு காரணம் கங்குலி மற்றும் ரிக்கி பாண்டிங் தான் என கூறியுள்ளார் டெல்லி அணியின் துவக்க வீரர் ஷிகர் தவான்.

பயிற்சியாளர் நியமனம்

பயிற்சியாளர் நியமனம்

டெல்லி கேபிடல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடுத்து 2019 ஐபிஎல் தொடரில் பிளே-ஆஃப்-க்கு தகுதி பெற்றுள்ளது. டெல்லி அணி இந்த சீசன் துவங்கும் முன் பல மாற்றங்களை செய்தது. பெயரை மாற்றியதோடு, ரிக்கி பாண்டிங்கை பயிற்சியாளராகவும், கங்குலியை ஆலோசகராகவும் நியமித்தது.

மீண்டு வர உதவி

மீண்டு வர உதவி

அது டெல்லி அணியின் வீரர்களிடையே பெரும் மாற்றத்தை உண்டாக்கியது. சில தோல்விகளை சந்தித்தாலும், அதில் இருந்து நம்பிக்கையுடன் மீண்டு வர உதவியது. அதையெல்லாம் குறிப்பிட்டு தான் தவான் அவர்களை புகழ்ந்துள்ளார்.

தவான் சொன்னது என்ன?

தவான் சொன்னது என்ன?

தவான் கூறுகையில், "பயிற்சியாளர்கள் முக்கிய பாங்கற்றினார்கள். எங்களுக்கு பாண்டிங், கங்குலி என தங்கள் அணிகளை வெற்றிகரமாக வழிநடத்திய இரண்டு முன்னாள் கேப்டன்கள் அமைந்தனர். அவர்களுக்கு எப்படி திட்டமிட வேண்டும் என தெரியும். அவர்களுக்கு எப்படி வீரர்களை தயார் செய்ய வேண்டும், நம்பிக்கை ஊட்ட வேண்டும் என்பதும் தெரியும்" என குறிப்பிட்டார்.

இறுதிப் போட்டி

இறுதிப் போட்டி

இந்த ஐபிஎல் தொடரில் தவான் பேட்டிங்கிலும் பெரிய மாற்றம் உண்டாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதற்கு ரிக்கி பாண்டிங் தான் காரணம் என கூறப்படுகிறது. அடுத்து டெல்லி அணியை வழிநடத்தும் இரு முன்னாள் கேப்டன்களும், இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவது குறித்த திட்டங்களை வகுத்துக் கொண்டிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

Story first published: Monday, April 29, 2019, 22:40 [IST]
Other articles published on Apr 29, 2019
English summary
IPL 2019 : Dhawan praises Ricky Ponting and Sourav Ganguly after entered play-off
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X