Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி, கோலியை சீண்டிய ரிஷப் பண்ட், பும்ரா.. பதிலடி கொடுத்த சீனியர்கள்!!

ஐபிஎல் தொடருக்கான விளம்பரங்களில் தோனி, கோலி ஆகியோர் இளம் வீரர்கள் ரிஷப் பண்ட் மற்றும் பும்ராவுக்கு பதில் அளிப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது.சில தினங்களுக்கு முன்பு, பும்ரா, கேப்டன் கோலியை எச்சரிப்பது போலவும், ரிஷப் பண்ட், தோனியை எச்சரிப்பது போலவும் வீடியோ வெளியானது. அதற்கு தான் இப்போது தோனி மற்றும் கோலி பதில் அளித்துள்ளனர்.

பும்ரா சீண்டல்

பும்ரா சீண்டல்

பும்ரா, தான் இன்னும் சிறந்த பந்துவீச்சாளர் என்ற நிலையை எட்டவில்லை. அதற்கு காரணம் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் கோலிக்கு எதிராக தான் இன்னும் வெற்றிகரமாக பந்து வீசவில்லை எனக் கூறி சீண்டி இருந்தார்.

ரிஷப் பண்ட் எச்சரிக்கை

ரிஷப் பண்ட் எச்சரிக்கை

அதே போல, ரிஷப் பண்ட், தன் அதிரடி ஆட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக காட்டுவேன் என தோனியை எச்சரித்து இருந்தார். இவர்கள் இருவரின் எச்சரிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில் தோனி மற்றும் கோலி இடம் பெறும் விளம்ரபமும் அடுத்து வெளியானது.

கோலி பதிலடி

கோலி பதிலடி

அதில் கோலி, "கேப்டனை ஸ்லெட்ஜிங் செய்றியா? ஆனா ஸ்லெட்ஜிங் செய்ய கத்துகிட்டதுக்கு மகிழ்ச்சி.. ஆனா அதுக்காக விட்டுக் கொடுக்க மாட்டேன்" என கூறி இருந்தார். பும்ரா மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும், கோலி ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்காகவும் ஆடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டம்ப்புக்கு பின்னாடி

ஸ்டம்ப்புக்கு பின்னாடி

தோனி, ரிஷப் பண்ட்டுக்கு அளித்த பதிலில், "சின்ன வயசுல நானும் உன்னை மாதிரி தான் இருந்தேன். வந்து உன்னோட ஆட்டத்தை மேட்ச்சுல ஆடு. நான் உனக்காக ஸ்டம்ப்புக்கு பின்னாடி காத்துகிட்டு இருப்பேன். விளையாட்டை ஆடி பெயர் எடு" என கூறி இருந்தார்.

Story first published: Thursday, February 28, 2019, 18:24 [IST]
Other articles published on Feb 28, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+