Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2019 ஐபிஎல் தொடரில் 200 சிக்ஸர்களை தாண்டப் போகும் 3 இந்திய வீரர்கள் இவர்கள் தான்!

மும்பை : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்)-இல் முன்னணி இந்திய வீரர்கள் மூவர் 200வது சிக்ஸ்-ஐ எதிர் நோக்கி காத்திருக்கின்றனர்.

ஐபிஎல் 2019 தொடர் வரும் மார்ச் 23 முதல் நடைபெற உள்ள நிலையில், கடந்த சீசன் போன்ற பரபரப்பு இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

200 சிக்ஸர்கள்

200 சிக்ஸர்கள்

இந்த சீசனில் தோனி, சுரேஷ் ரெய்னா மற்றும் ரோஹித் சர்மா ஆகிய மூவரும் முக்கிய சிக்ஸர் சாதனையை எதிர் நோக்கி உள்ளனர். இவர்கள் மூவரும் 2019 ஐபிஎல் தொடரில் 200 சிக்ஸரை எட்டுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மூவர் கூட்டணி

மூவர் கூட்டணி

தோனி 186 சிக்ஸர், சுரேஷ் ரெய்னா 185 சிக்ஸர், ரோஹித் சர்மா 184 சிக்ஸர் அடித்து, ஐபிஎல் தொடர்களில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் 3, 4 மற்றும் 5ஆம் இடத்தை பிடித்துள்ளனர்.

முதல் இடத்தில் கெயில்!

முதல் இடத்தில் கெயில்!

ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர் அடித்து முதல் இடத்தில் இருப்பவர் கிறிஸ் கெயில், அவர் 292 சிக்ஸர்கள் அடித்து இந்த ஆண்டு 300வது சிக்ஸரை தாண்டும் போட்டியில் தனியாளாக ஓடிக் கொண்டு இருக்கிறார்.

இரண்டாம் இடத்தில் யார்?

இரண்டாம் இடத்தில் யார்?

இரண்டாம் இடத்தில் ஏ பி டிவில்லியர்ஸ் 186 சிக்ஸர்களுடன் இருக்கிறார். தோனியும் அதே எண்ணிக்கையில் சிக்ஸர் அடித்து இருந்தாலும், அவரை விட டிவில்லியர்ஸ் குறைந்த போட்டிகளில் 186 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.

Story first published: Saturday, March 16, 2019, 15:52 [IST]
Other articles published on Mar 16, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+