Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் தொடரில் அதிக முறை பிளே-ஆஃப் போன டீம் எது? பட்டுன்னு சொல்லுங்க பார்ப்போம்!!

மும்பை : ஐபிஎல் தொடரில் கோப்பை வெல்வது தான் அதிகபட்ச வெற்றி என்றாலும், பிளே-ஆஃப் வரை சென்றால் சிறந்த அணிகளில் ஒன்று என்ற பெயரைப் பெற முடியும்.

ஐபிஎல் தொடரின் லீக் சுற்றின் முடிவில் அதிக புள்ளிகளைப் பெறும் நான்கு அணிகள் பிளே-ஆஃப் செல்லும். அந்த வகையில், ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை பிளே-ஆஃப் அல்லது அரையிறுதி வரை சென்ற சிறந்த அணிகளின் பட்டியல் -

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர்

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர்

பெங்களூர் அணி இதுவரை 11 ஐபிஎல் தொடர்களில் பங்கேற்று, அதில் ஐந்து முறை பிளே-ஆஃப் சென்றுள்ளது. எனினும், இது வரை இந்த அணி கோப்பை வென்றதில்லை என்ற மோசமான நிலைமையில் தான் உள்ளது. கடந்த இரண்டு தொடர்களாக மிகவும் பின்தங்கி இருக்கும் நிலையில், இந்த முறை பிளே-ஆஃப் சென்றே ஆக வேண்டிய நிலையில் உள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை முதல் தொடரில் இருந்தே எராளமான ரசிகர்களை கொண்ட அணி. இது வரை ஆறு முறை பிளே-ஆப் சென்றுள்ளது. அதில் இரண்டு முறை வெற்றியும் பெற்றுள்ளது.

மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ் அணி 11 தொடர்களில் ஏழு முறை பிளே-ஆஃப் சென்றுள்ளது. மூன்று முறை கோப்பை வென்றுள்ளது. ஐபிஎல் தொடரில் சிறந்த அணிகளில் ஒன்றாக விளங்கி வருகிறது மும்பை இந்தியன்ஸ்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அடித்துக் கொள்ள ஆளே இல்லை எனும் அளவிற்கு, பங்கேற்ற 9 ஐபிஎல் தொடர்களில் 9 முறையும் பிளே-ஆஃப் அல்லது அரையிறுதிக்கு சென்ற ஒரே அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. அதிலும், மூன்று முறை கோப்பை வென்ற அணி. தோனி தலைமையின் கீழ் ஐபிஎல் தொடரின் சிறந்த அணியாக விளங்கி வருகிறது சிஎஸ்கே.

Story first published: Thursday, March 21, 2019, 9:08 [IST]
Other articles published on Mar 21, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+