Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி ரசிகர்களுக்கு அதிர்ச்சி... ஐபிஎல் பைனல் சென்னையில் இல்லை.. மும்பைக்கு மாறுகிறது?

மும்பை: கேலரி பிரச்சனை காரணமாக சென்னையில் நடைபெற இருந்த ஐபிஎல் இறுதிப்போட்டி மும்பைக்கு மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் போட்டியில் லீக ஆட்டங்களுக்கான அட்டவணை மட்டுமே அறிவிக்கப்பட்டது. பிளே ஆப் சுற்றுக்கான தேதி, இடம் ஆகியவை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

சென்னை சூப்பர் கிங்ஸ் நடப்பு சாம்பியன் என்பதால் இறுதிப்போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறலாம் என்று தகவல் வெளியாகி இருந்தது. இந் நிலையில் சென்னையில் நடைபெற இருந்த ஐபிஎல் இறுதிப்போட்டி மும்பைக்கு மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தீராத கேலரி பிரச்சனை

தீராத கேலரி பிரச்சனை

சேப்பாக்கம் மைதானத்தில் ஐ, ஜே மற்றும் கே ஆகிய 3 கேலரிகள் மூடப்பட்டு இருக்கிறது. அவை இன்னும் திறக்கப்படவில்லை. அந்த 3 கேலரிகளில் 12 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து போட்டியை கண்டு களிக்கலாம்.

முக்கிய ஆலோசனை

முக்கிய ஆலோசனை

இந்த பிரச்சினை காரணமாக இறுதிபோட்டி சென்னையில் இருந்து மும்பைக்கு மாற்றம் செய்யப்படலாம் என்று தெரிகிறது. இதுதொடர்பாக கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வினோத்ராய் மற்றும் உறுப்பினர்கள் டயானா எடுல்ஜி, ரவிதோக்டே, தற்காலிக தலைவர் கண்ணா உள்ளிட்டோர் டெல்லியில் நடந்த கூட்டத்தில் ஆலோசனை செய்துள்ளனர்.

அறிவிப்பு வெளியாகவில்லை

அறிவிப்பு வெளியாகவில்லை

ஆனால்.. என்ன பேசினர் என்பது குறித்து தகவல்கள் இல்லை. கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பது குறித்தும் அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால்... இறுதிபோட்டியானது, சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு பதில் மும்பைக்கு மாற்றலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரசிகர்கள் கவலை

ரசிகர்கள் கவலை

இத்தகைய தகவல்களால் தல தோனியின் சென்னை ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். ஏன் என்றால் தோனிக்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை விட.. சென்னை அணிக்கு அவர் கேப்டன் என்பதால் ரசிகர்கள் பட்டாளம் எக்கக்சக்கம்.

Story first published: Monday, April 8, 2019, 23:14 [IST]
Other articles published on Apr 8, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+