For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சென்னை ரசிகர்களே..! இந்த அதிர்ச்சியை தாங்கிக்குங்க.. ஐபிஎல் பைனல் இங்கல்ல.. ஹைதராபாத்தில் நடக்குது

சென்னை: ஐபிஎல் இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இருந்து ஹைதராபாத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது, சென்னை ரசிகர்களுக்கு பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கிரிக்கெட் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற ஐபிஎல் தொடரின் 12வது சீசன், மார்ச் 23ம் தேதி சென்னையில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த சீசனில் சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது.

சன் ரைசர்ஸ் அணி 2வது இடம் பெற்றது. இதனால் நடப்பு சாம்பியன் அணிக்கு சொந்தமான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்தான் இறுதிப் போட்டி நடத்தப்படுவதாக இருந்தது.

3 கேலரிகள்

3 கேலரிகள்

இந்நிலையில், ஐ, ஜே, கே ஆகிய 3 ஸ்டாண்டுகளை திறக்க தேவைப்படும் அனுமதியைப் பெறவில்லை என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்து உள்ளது. அதனால் ஐபிஎல் இறுதிப் போட்டி சென்னையிலிருந்து ஹைதராபாத் மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் நியமித்த பிசிசிஐ நிர்வாகக் கமிட்டியின் வினோத் ராய் தெரிவித்துள்ளார்.

பிளே ஆப் போட்டி

பிளே ஆப் போட்டி

நாக் அவுட் போட்டிகளின் கேட் டிக்கெட் விற்பனைகள் பிசிசிஐ விருப்பத் தெரிவாகும். பிளே ஆப் போட்டிகள் சென்னை மற்றும் விசாகப்பட்டினத்தில் மே 8 மற்றும் மே 10ம் தேதிகளில் நடைபெறும் என்று நிர்வாகக் கமிட்டி கூறியுள்ளது.

வருவாய் இழப்பு

வருவாய் இழப்பு

சென்னை சேப்பாக்க மைதானத்தின் 3 ஸ்டாண்டுகளைச் சேர்த்தால் 12,000 த்திற்கும் அதிகமான டிக்கெட் விற்பனையாகும். ஆனால் அங்கு அனுமதி இல்லை என்பதோடு... வருமான இழப்பும் ஏற்படும் என்பதால் பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது.

தகுதிச்சுற்று போட்டி

தகுதிச்சுற்று போட்டி

அனைத்து நாக் அவுட் போட்டிகளின் கேட் கலெக்ஷனும், டிக்கெட் விற்பனையும் பிசிசிஐ அதிகாரத்தின் கீழ் வருகிறது. ஆனால் தகுதிச்சுற்று 1 போட்டி சென்னையில் அனுமதிக்கப்பட்டது.

அகற்ற முடியாது

அகற்ற முடியாது

அதற்கு வினோத் ராய் கூறுகையில், சென்னை அணி கடந்த முறை சாம்பியன் என்பதால் குவாலிபயர் 1 மற்றும் இறுதிப் போட்டி சென்னைக்கு வழங்கப்பட்டது. இப்போது அவர்கள் டாப் 2 அணிக்குள் வரும்போது நாம் அனைத்துப் போட்டிகளையும் அங்கிருந்து அகற்ற முடியாது. ஒரேயொரு நாக் அவுட் போட்டி அவர்களுக்கு அங்கு வழங்குவது முறையானது தான் என்றார்.

மே 12ல் இறுதிப்போட்டி

மே 12ல் இறுதிப்போட்டி

ஹைதராபாத்தில் மே 6,8, 10ம் தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. 12-ம் தேதி ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி நடக்கிறது. 2012ம் ஆண்டு முதல் சென்னை சேப்பாக்கத்தில் இந்த 3 ஸ்டாண்ட்கள் மூடியே உள்ளன. ஒரேயொரு இந்தியா, பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் விதிவிலக்காக டிக்கெட் இந்த ஸ்டாண்டுகளில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, April 22, 2019, 21:30 [IST]
Other articles published on Apr 22, 2019
English summary
IPL 2019 final shifted from Chennai to Hyderabad.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+