Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நான் கூடத்தான் தோனிகிட்ட மல்லுக்கு நின்னேன்.. ஆனா அதையெல்லாம் உள்ளேயே வைச்சுக்கணும்!

டெல்லி : கொல்கத்தா வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸலுக்கு அறிவுரை சொல்கிறேன் என்ற பெயரில் தனக்கும், தோனிக்கும் கருத்து வேறுபாடு இருந்தது குறித்து மேலோட்டமாக கோடிட்டு காட்டியுள்ளார் கெளதம் கம்பீர்.

கௌதம் கம்பீர் என்றாலே பரபரப்பு என்ற நிலை வந்துவிட்டது, தீவிர அரசியலில் குதித்து விட்ட அவர், இன்னும் கிரிக்கெட்டை விட்ட பாடில்லை. ஐபிஎல் தொடர் குறித்து பல்வேறு தளங்களில் தன் கருத்துக்களை, விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் கம்பீர்.

ரஸ்ஸல் விமர்சனம்

ரஸ்ஸல் விமர்சனம்

சமீபத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அதிரடி வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸல், பேட்டியின் போது, தன் அணி நிர்வாகம், கேப்டன் குறித்து மறைமுகமாக, பெயர் சொல்லாமல் விமர்சனம் செய்து இருந்தார். தொடர்ந்து தோல்விகளை சந்திக்க, தவறான நேரத்தில், தவறான பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியது தான் காரணம் என கூறினார்.

தினேஷ் கார்த்திக் ஏமாற்றம்

தினேஷ் கார்த்திக் ஏமாற்றம்

ரஸ்ஸலின் இந்த வெளிப்படையான விமர்சனம் குறித்து கொல்கத்தா அணியின் முன்னாள் கேப்டன் கம்பீர் ஏற்கனவே, அவரை கண்டித்து கருத்து கூறி இருந்தார். டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் கட்டுரை எழுதியுள்ள கம்பீர், ரஸ்ஸல் தெரிவித்த கருத்துக்களால், கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் எந்தளவு ஏமாற்றம் அடைந்திருப்பார் என புரிந்து கொள்ள முடிகிறது என தெரிவித்து இருந்தார்.

விவாதிக்கக் கூடாது

விவாதிக்கக் கூடாது

மேலும், யாரும் தோற்க விரும்ப மாட்டார்கள், மோசமான முடிவுகளை எடுக்க வேண்டும் என விரும்ப மாட்டார்கள். கொல்கத்தா அணி சில சராசரியான முடிவுகளை எடுத்துள்ளது. ஆனால், அதை பத்திரிக்கையாளர் சந்திப்பில் விவாதிக்கக் கூடாது என்று தெரிவித்தார் கம்பீர்.

கருத்து வேறுபாடு

கருத்து வேறுபாடு

அடுத்து ரஸ்ஸலுக்கு அறிவுரை சொல்ல வந்த கம்பீர், "சில சமயங்களில் நான் கூட கேப்டன் தோனியுடன் கருத்து வேறுபட்டுள்ளேன். ஆனால், அந்த விஷயங்கள் அணிக்குள் மட்டுமே இருக்கும்" என கூறியுள்ளார்.

வெளிப்படை பேச்சு

வெளிப்படை பேச்சு

தோனிக்கும், கம்பீருக்கும் கருத்து வேறுபாடு இருந்ததாக அரசல், புரசலாக எல்லோருக்கும் தெரியும். ஆனால், அதை நீண்ட நாட்கள் கழித்து வெளிப்படையாக பேசியுள்ளார் "புது அரசியல்வாதி" கம்பீர்.

Story first published: Friday, May 3, 2019, 13:36 [IST]
Other articles published on May 3, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+