Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

குல்தீப் யாதவ் பார்ம் அவுட் தான்.. ஆனா ஒரு பிரச்சனையும் இல்லை.. புட்டு புட்டு வைத்த ஹர்பஜன் சிங்!

Recommended Video

IPL 2019: குல்தீப் யாதவ் பௌலிங்,ஒரு பிரச்சனையும் இல்லை. ஹர்பஜன் கருத்து!- வீடியோ

சென்னை : 2019 ஐபிஎல் தொடரில் இந்திய அணியின் முன்னணி சுழற் பந்துவீச்சாளராக இருந்த குல்தீப் யாதவ் பார்ம் இழந்து தவித்து வருகிறார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடி வரும் குல்தீப் யாதவ், தொடர்ந்து ரன்களை வாரிக் கொடுத்ததோடு, அதிக அளவில் விக்கெட்களும் வீழ்த்தவில்லை

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

இந்த நிலையில், கொல்கத்தா அணி குல்தீப் யாதவ்வுக்கு கடந்த போட்டியில் வாய்ப்பு கொடுக்கவில்லை. இந்திய அணிக்கு சிறப்பாக பந்து வீசி வந்த குல்தீப், ஐபிஎல் தொடரில் பார்ம் இழந்தது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

கவலை

கவலை

ஐபிஎல் தொடர் முடிந்த இரு வாரங்களில் உலகக்கோப்பை தொடர் துவங்க உள்ளது. இந்த நிலையில், குல்தீப் யாதவ் அதற்குள் பார்முக்கு திரும்புவாரா என்ற கவலை ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. ஆனால், அனுபவ சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் இது குறித்து நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசியுள்ளார்.

டி20 கிரிக்கெட்

டி20 கிரிக்கெட்

ஹர்பஜன் கூறுகையில், ஐபிஎல்-இல் குல்தீப் மோசமான பார்மில் தான் இருக்கிறார். டி20 கிரிக்கெட் சில சமயம் எந்த பந்துவீச்சாளரின் தன்னம்பிக்கையையும் உடைத்து விடும். எனவே, அதனுடன் மற்ற கிரிக்கெட் போட்டிகளை ஒப்பிடக் கூடாது என குறிப்பிட்டார்.

யார் அடித்து ஆடுகிறார்கள்?

யார் அடித்து ஆடுகிறார்கள்?

குல்தீப் யாதவ்வின் பந்துவீச்சு நுணுக்கங்களில் எந்த பிரச்சனையும் இல்லை. அவரை யார் அடித்து ஆடுகிறார்கள் என்பதில் தான் விஷயம் இருக்கிறது என்கிறார் ஹர்பஜன் சிங். குல்தீப் பந்துவீச்சை அடித்து ஆடுவது இந்திய பேட்ஸ்மேன்கள் தான் என்கிறார்.

வேறு குல்தீப் யாதவ்

வேறு குல்தீப் யாதவ்

எனவே, இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடரின் போது குல்தீப் நல்ல பார்மில் இருப்பார். ஒருநாள் போட்டி என்பது வேறு. அங்கே வேறு குல்தீப்பை பார்ப்பீர்கள் என்கிறார் ஹர்பஜன் சிங். ரசிகர்களும் அதே நம்பிக்கையில் தான் உள்ளனர்.

Story first published: Wednesday, April 24, 2019, 21:35 [IST]
Other articles published on Apr 24, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+