Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

குறிச்சு வைச்சுக்கோங்க.. சென்னை சூப்பர் கிங்ஸ்-இன் முக்கிய வீரர்கள் இவங்க 8 பேர் தான்!!

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2019 ஐபிஎல் தொடருக்கு தயாராகி வருகிறது. கடந்த சீசனில் தொடரை வென்று சாம்பியனாக இந்த முறை பங்கேற்றுள்ளதால், சென்னை அணி மீது தான் அனைவரின் பார்வையும் உள்ளது.

இந்த நிலையில், இந்த சீசனில் எந்தெந்த வீரர்கள் சென்னை அணியில் அதிக போட்டிகளில் ஆடி, முக்கிய பங்காற்றுவார்கள் என்பது குறித்து பார்க்கலாம்.

ரவீந்திர ஜடேஜா

ரவீந்திர ஜடேஜா

ஜடேஜா ஆல்-ரவுண்டர் என கூறினாலும், இது வரை பேட்டிங்கில் பெரிய அளவில் சோபிக்கவில்லை. அந்த குறையை இந்த முறை போக்குவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் ஆடும் ஆட்டம் தான் ஜடேஜாவுக்கு உலகக்கோப்பை வாய்ப்பை உறுதி செய்யும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுரேஷ் ரெய்னா

சுரேஷ் ரெய்னா

சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரில் அதிக ரன் குவித்தவர் என்ற சாதனையை தொடர வேண்டும் என்றால், இந்த தொடரில் 500+ ரன்களை குவிக்க வேண்டும். அதை தாண்டி டி20 தொடரில் நம்பகமான வீரர். பீல்டிங்கில் கில்லி. 2019 ஐபிஎல்-இல் தொடரிலும் முந்தைய தொடர்கள் போல கலக்குவார் என எதிர்பார்க்கலாம்.

டிவைன் பிராவோ

டிவைன் பிராவோ

மிகவும் அழுத்தமான நேரங்களில் எல்லாம் கை கொடுப்பவர் பிராவோ. "கடைசி ஓவரா.. கூப்பிடு பிராவோவை" என தோனி கூறும் அளவிற்கு நம்பிக்கை நாயகன். இந்த முறையும் தன் நம்பகத்தன்மையை காப்பாற்றிக் கொள்வாரா பிராவோ? என்ற கேள்வியோடு ரசிகர்கள் இவரது ஆட்டத்தை காண ஆவலுடன் உள்ளனர்.

லுங்கி நிகிடி

லுங்கி நிகிடி

தென்னாப்பிரிக்கா அணியின் இளம் வீரர். இவரது வேகப் பந்துவீச்சு சிறப்பாக உள்ளது. கடந்த ஐபிஎல் தொடர் தான் லுங்கியின் முதல் ஐபிஎல் தொடர். அப்போது அதிக வாய்ப்பு பெறாத லுங்கி, தென்னாப்பிரிக்க அணியில் பெற்ற சர்வதேச அனுபவத்தை அடுத்து, இந்த சீசனில் முதன்மை வேகப் பந்துவீச்சாளராக இருப்பார் என தெரிகிறது.

ஷேன் வாட்சன்

ஷேன் வாட்சன்

ஷேன் வாட்சன் கடந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். சமீபத்தில் நடந்து முடிந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் பட்டையைக் கிளப்பி தன் அணியை வெற்றி பெற வைத்து, தொடர் நாயகன் விருதையும் வென்றுள்ளார். சென்னை அணியையும் ஐபிஎல் தொடரை வெற்றி பெற வைப்பார் என எதிர்பார்க்கலாம்.

அம்பதி ராயுடு

அம்பதி ராயுடு

அம்பதி ராயுடு கடந்த ஐபிஎல் ஆட்டத்தின் மூலம் இந்திய அணியில் நீண்ட காலம் கழித்து இடம் பிடித்தார். எனினும், இந்திய அணியில் தற்போது அவரது நிலை ஊசலாட்டமாக இருப்பதால், ஐபிஎல் தொடரில் கடந்த ஆண்டைப் போல அதிரடி காட்டி இந்திய அணியில் இடம் பிடிக்க முயற்சிப்பார்.

கேதார் ஜாதவ்

கேதார் ஜாதவ்

கேதார் ஜாதவ் சிறந்த ஆல்-ரவுண்டராக உருமாறி வருகிறார். இவரது பந்துவீச்சு அதிக நுணுக்கங்கள் இல்லாவிட்டாலும் விக்கெட் வீழ்த்தும் வகையில் இருக்கிறது. அதே போல நெருக்கடியான நேரங்களில் அருமையாக பேட்டிங் செய்கிறார். கடந்த சீசனில் காயம் காரணமாக சென்னை அணிக்காக ஆடாத ஜாதவ், இந்த முறை அந்த குறையைப் போக்குவதுடன், தன் திறமையை காட்டுவார் என எதிர்பார்க்கலாம்.

கேப்டன் தோனி

கேப்டன் தோனி

தோனி கடந்த சீசனில் சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தினார். 2018 ஐபிஎல் தொடரில் அவரது பேட்டிங் சராசரி 75+ ஆக இருந்தது. இந்த ஆண்டு துவக்கம் முதல் நல்ல பார்மில் இருக்கும் தோனி, இந்த முறையும் சிறப்பாக ஆடுவார் என எதிர்பார்க்கலாம். அப்படியே, நான்காவது முறையாக ஐபிஎல் தொடரைக் கைப்பற்றுவார் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

Story first published: Wednesday, March 20, 2019, 15:31 [IST]
Other articles published on Mar 20, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+