Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே-ன்னாலே பாசம் பொங்குதே.. ரசிகரின் அன்புக்கு நெகிழ வைக்கும் பதில் சொன்ன இம்ரான் தாஹிர்!

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் அந்த அணியின் மேல் வைத்துள்ள அன்பு எல்லோரும் அறிந்ததே. அப்படி ஒரு சிஎஸ்கே ரசிகருக்கு, அந்த அணியின் முக்கிய சுழற் பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர் பதில் அளித்துள்ளார்.

இம்ரான் தாஹிர் விக்கெட் எடுத்தவுடன் அதை கொண்டாடும் பாணி தனித்துவமானது. அதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே "பராசக்தி எக்ஸ்பிரஸ்" என வர்ணித்து வருகிறது.

தத்ரூபமான ஓவியம்

சென்னை அணியின் ரசிகர் ஒருவர் தாஹிரின் கொண்டாட்டத்தை அப்படியே ஒரு தத்ரூபமான ஓவியமாக வரைந்துள்ளார். அதன் கீழே "பராசக்தி எக்ஸ்பிரஸ்" என எழுதி, அதை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தாஹிர் பதில்

அந்த ஓவியப் பதிவிற்கு இம்ரான் தாஹிர் பதில் அளித்துள்ளார். "உங்கள் அன்பால் பாதிக்கப்பட்டுள்ளேன். நீங்கள் இதை செய்ய எவ்வளவு நேரம் ஆகி இருக்கும் என சிந்திக்க முடிகிறது. உங்களின், ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இன்று பந்துவீசவில்லை. மன்னிக்கவும். இன்னொரு வாய்ப்பு கிடைத்தால் என் சிறப்பான பந்துவீச்சை அளிப்பேன்" என தன் பதிலில் கூறியுள்ளார்.

விக்கெட் இல்லை

விக்கெட் இல்லை

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் இம்ரான் தாஹிர் விக்கெட் எடுக்கவில்லை. அதற்கு முந்தைய போட்டிகளில் எல்லாம் விக்கெட் வீழ்த்தி வந்த அவர், இந்த ஒரு போட்டியில் மட்டும் விக்கெட் வீழ்த்த முடியாத நிலை ஏற்பட்டது.

நெகிழ்ச்சி

நெகிழ்ச்சி

அதற்குத் தான் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் இம்ரான் தாஹிர். ரசிகரின் அன்புக்கு பதில் அளித்ததோடு, அதற்கு மரியாதை செய்யும் வகையில் தான் செயல்படவில்லை என மன்னிப்பு கோரி ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டார் இம்ரான் தாஹிர்.

Story first published: Thursday, April 25, 2019, 12:27 [IST]
Other articles published on Apr 25, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+