அடடே.. இப்படித்தான் இருக்கணும்.. பெரிய தொகையை நாட்டுக்காக நன்கொடையாக அளித்த ஐபிஎல்!!
சென்னை : ஐபிஎல் நிர்வாகம் சார்பாக சுமார் ரூபாய் 20 கோடி இந்திய ராணுவம், சிஆர்பிஎஃப், விமானப்படை மற்றும் கடற்படைக்கு வழங்கப்பட்டது.
2019 ஐபிஎல் துவக்க விழா ரத்து செய்யப்பட்டதை அடுத்து, துவக்க விழா செலவிற்கான தொகையை ஐபிஎல் நிர்வாகம் இந்திய பாதுகாப்பு படைகளுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.

தீவிரவாத தாக்குதல்
காஷ்மீரில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் நாற்பதுக்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியாகினர். அதனையடுத்து, ஐபிஎல் கொண்டாட்டங்களை ரத்து செய்ய முடிவெடுத்தது பிசிசிஐ.

துவக்க விழா இல்லை
அதன்படி, இன்று துவங்கவுள்ள ஐபிஎல் தொடரில் எந்தவித துவக்க விழாவும் நடத்தப்படவில்லை. 2019 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியான சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் போட்டி நேரடியாக நடைபெற உள்ளது.
20 கோடி நன்கொடை
ஐபிஎல் துவக்க விழாவிற்கு என சுமார் 20 கோடி வரை செலவாகும் என்ற முடிவின் அடிப்படையில், இந்திய ராணுவத்திற்கு 11 கோடி, சிஆர்பிஎஃப் படைக்கு 7 கோடி, விமானப்படைக்கு 1 கோடி மற்றும் கடற்படைக்கு 1 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

நல்ல விஷயம்
இதுவரை ஐபிஎல் துவக்க விழா என்றால் மிக பிரம்மாண்டமாக நடைபெறும். அது இந்த ஆண்டு தவிர்க்கப்பட்டு, அதற்கான செலவுத் தொகை நாட்டின் பாதுகாப்பிற்கு நன்கொடையாக கொடுக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில் இது தொடர வேண்டும்.


Click it and Unblock the Notifications