யப்பா சாமி! ஐபிஎல் ஆடின வரை போதும்.. சீக்கிரம் கிளம்புறது நல்லது.. கலக்கத்தில் தென்னாப்பிரிக்கா!!
டெல்லி : 2019 ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்கள் எடுத்த பந்துவீச்சாளர் தென்னாப்பிரிக்காவின் காகிசோ ரபாடா.
டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக ஆடி வரும் ரபாடா உலகின் சிறந்த வேகப் பந்துவீச்சாளர். ஐபிஎல் தொடரை அடுத்து நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடரில் பந்துவீச்சில் அவரை நம்பித் தான் திட்டம் போட்டு உள்ளது தென்னாப்பிரிக்கா அணி.

ரபாடா உள்காயம்
இந்த நிலையில், ஐபிஎல் தொடரின் இடையே அவருக்கு முதுகில் உள்காயம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. முதுகு வலி காரணமாக சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ரபாடா பங்கேற்கவில்லை.

ஸ்டெய்ன் காயம்
இது தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போர்டை கலக்கத்தில் ஆழ்த்தி இருக்கிறது. ஏற்கனவே, தென்னாப்பிரிக்கா வேகப் பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகி நாட்டுக்கு திரும்பி உள்ளார். அவருக்கு தோள்பட்டையில் உள்காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

கலக்கம்
உலகக்கோப்பைக்கு முன் அவர் குணமடைவாரா என்பது தெரியவில்லை. இந்த சூழலில், மற்றொரு முன்னணி வேகப் பந்துவீச்சாளரான ரபாடாவும் காயத்தில் இருப்பதால், தென்னாப்பிரிக்கா அணி "ஏன் ஐபிஎல் விளையாட அனுமதி கொடுத்தோம்?" கையை பிசைந்து கொண்டு இருக்கிறது.

அறிக்கை
இப்போதைக்கு, தென்னாப்பிரிக்க அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் ரபாடா காயம் குறித்த மருத்துவ அறிக்கைகளை கேட்டுள்ளது. அதை பார்த்துவிட்டு ரபாடாவை திரும்ப அழைப்பது குறித்து தென்னாப்பிரிக்க அணி முடிவெடுக்கும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications