Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனிக்கு புது தலைவலி.. சிஎஸ்கே-வுக்கு அடி மேல் அடி.. காயம் காரணமாக ஹர்பஜனும் ஆடமாட்டார்!

கொல்கத்தா : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2019 ஐபிஎல் தொடரில் ராஜபாட்டை போட்டு தன் முதல் ஏழு போட்டிகளில் ஆறு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

ஆனால், அந்த அணிக்கு துவக்கம் முதலே இருந்து வரும் ஒரே பிரச்சனை பந்துவீச்சாளர்கள் தான். அதில் மற்றொரு அடியாக ஹர்பஜன் சிங் காயம் காரணமாக கொல்கத்தா போட்டியில் பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிறது.

முதன்மையானவர்

முதன்மையானவர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த சீசனில் சிறப்பான பந்துவீச்சாளராக அமைந்தவர்களில் முதன்மையானவர் ஹர்பஜன் சிங். நான்கு போட்டிகளில் மட்டுமே ஆடிய ஹர்பஜன் சிங் 7 விக்கெட்கள் வீழ்த்தி, மிகக் குறைவான ரன்கள் கொடுத்துள்ளார்.

பங்கேற்கமாட்டார்

பங்கேற்கமாட்டார்

இந்த நிலையில், அவருக்கு கழுத்து வலி ஏற்பட்டதால், ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஹர்பஜன் பங்கேற்கமாட்டார் என தெரிய வந்துள்ளது.

கேள்விக்குறி

கேள்விக்குறி

மேலும், ஹர்பஜன் சிங்கின் மனைவி மற்றும் மகள் உடல்நலக் குறைவாக உள்ளதால், அவர்களை காண விரைந்துள்ளார் ஹர்பஜன். ஹர்பஜன் கொல்கத்தா போட்டிக்கு பின் சென்னை அணியில் இணைவாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

வேகப் பந்துவீச்சு சராசரி

வேகப் பந்துவீச்சு சராசரி

சென்னை அணியின் அடுத்த ஒரீரு போட்டிகளில் ஹர்பஜன் விளையாடமாட்டார் என்பது உறுதியாகி உள்ளது. ஏற்கனவே, லுங்கி நிகிடி, டேவிட் வில்லி ஆகியோர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதால், சென்னை அணியின் வேகப் பந்துவீச்சு சராசரியாக உள்ளது.

பிராவோ இல்லை

பிராவோ இல்லை

ஏற்கனவே, பிராவோ காயத்தால் அடுத்த சில போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். புதிதாக வந்த ஸ்காட் குஜலேஜின் மற்றும் ஷர்துல் தாக்குர் ரன்களை அதிகம் கொடுக்கின்றனர். தீபக் சாஹர் மட்டுமே அருமையாக பந்துவீசி வேகப் பந்துவீச்சை தனியாக சுமந்து வருகிறார்.

பலத்த அடி

பலத்த அடி

வேகப் பந்துவீச்சு கைவிட்ட நிலையில், சுழற் பந்துவீச்சை மட்டுமே நம்பி உள்ளது சென்னை அணி. இந்த சூழ்நிலையில், அதில் ஹர்பஜன் சிங்கும் சில போட்டிகளில் ஆடமாட்டார் என கூறப்படுவதால், சென்னை அணிக்கு பலத்த அடி விழுந்துள்ளது. தோனி இனி வரும் போட்டிகளுக்கு பந்துவீச்சாளர்களை தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலையில் இருக்கிறார்.

Story first published: Saturday, April 13, 2019, 23:26 [IST]
Other articles published on Apr 13, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+