Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த 2 ஓவரும் சூப்பரோ சூப்பர்.. கொல்கத்தாவை மிரட்டி அடக்கிய சிஎஸ்கே-வின் இம்ரான் தாஹிர்!!

Recommended Video

முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி கொல்கத்தாவை மிரட்டிய இம்ரான் தாஹிர்

கொல்கத்தா : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இம்ரான் தாஹிர் அசத்தலாக பந்து வீசினார்.

கொல்கத்தா அணி அதன் சொந்த மண்ணில் அதிரடியாக ஆடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னை அணி தன் பந்துவீச்சு மூலம் அந்த அணியை 161 ரன்களுக்குள் அடக்கியது. 200 ரன்கள் அடிக்கும் என போட்டி துவங்கும் முன் இருந்த எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்தது. இதற்கு முக்கிய காரணம் இம்ரான் தாஹிர்.

முக்கிய விக்கெட்கள்

முக்கிய விக்கெட்கள்

சென்னை அணி இந்தப் போட்டியில் ஜடேஜா, சான்ட்னர், இம்ரான் தாஹிர் என மூன்று சுழற் பந்துவீச்சாளர்களுடன் களம் இறங்கியது. இவர்களில் இம்ரான் தாஹிர் விக்கெட் வேட்டை நடத்தினார். நான்கு முக்கிய வீரர்கள் விக்கெட்டை எடுத்து கொல்கத்தா அணியை மிரள வைத்தார்.

11வது ஓவரில்..

11வது ஓவரில்..

கொல்கத்தா அணியில் 3வது மற்றும் 4வது வரிசையில் களமிறங்கிய நிதிஷ் ராணா, ராபின் உத்தப்பாவை 11வது ஓவரில் வீழ்த்தி 10 ஓவரில் 77 ரன்கள் குவித்த கொல்கத்தா அணியை திணற வைத்தார்.

15வது ஓவரில்..

15வது ஓவரில்..

அதன் பின் துவக்க வீரர் கிறிஸ் லின் அதிரடியாக 82 ரன்கள் குவித்து ஆடி வந்த நிலையில், அவரை 15வது ஓவரில் ஆட்டமிழக்கச் செய்தார். தொடர்ந்து அதே ஓவரில் அதிரடி மன்னன் ரஸ்ஸல் விக்கெட்டை 10 ரன்களில் சாய்த்தார். ரஸ்ஸல் இந்தப் போட்டி தவிர்த்து அனைத்து போட்டிகளிலும் ரன் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது விக்கெட் சென்னை பந்துவீச்சில் திருப்புமுனையாக அமைந்தது.

அசத்தல் பௌலிங்

அசத்தல் பௌலிங்

ரஸ்ஸல், கிறிஸ் லின் ஒரே ஓவரில் ஆட்டமிழக்க, கொல்கத்தா அணி ரன் குவிக்கும் வேகத்தை இழந்தது. கடைசி நான்கு ஓவர்களில் அந்த அணி 19 ரன்கள் மட்டுமே எடுத்தது. இம்ரான் தாஹிர் ஒவ்வொரு ஓவரிலும் இரண்டிரண்டு விக்கெட்டாக நான்கு விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.

எத்தனை விக்கெட்கள்?

எத்தனை விக்கெட்கள்?

நடப்பு ஐபிஎல் தொடரில் இம்ரான் தாஹிர் 8 போட்டிகளில் 13 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறை ஐபிஎல் தொடரில் இம்ரான் தாஹிர் அதிக விக்கெட்கள் வீழ்த்துவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

Story first published: Sunday, April 14, 2019, 19:44 [IST]
Other articles published on Apr 14, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+