For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

9 ஆண்டுகள் கழித்து பெங்களூருக்கு வந்த டேல் ஸ்டெய்ன்.. இவர் மட்டும் இல்லைனா.. அவமானமா போயிருக்கும்!!

9 ஆண்டுகள் கழித்து பெங்களூருக்கு வந்த டேல் ஸ்டெய்ன்.. இவர் மட்டும் இல்லைனா.. அவமானமா போயிருக்கும்!!

கொல்கத்தா : ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு மாற்று வீரராக டேல் ஸ்டெய்ன் தேர்வு செய்யப்பட்டு, கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கினார்.

இவர் சுமார் 9 ஆண்டுகளுக்கு பின் பெங்களூர் அணிக்காக ஐபிஎல் தொடரில் ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இந்த போட்டியில் பந்துவீச்சில் போட்ட அஸ்திவாரத்தின் காரணமாக பெரும் அவமானத்தில் இருந்து தப்பித்தது பெங்களூர் அணி.

9 ஆண்டுகள் கழித்து..

9 ஆண்டுகள் கழித்து..

டேல் ஸ்டெய்ன் கடைசியாக 2010ஆம் ஆண்டு பெங்களூர் அணிக்காக ஐபிஎல் தொடரில் ஆடினார். அதன் பின் டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் என இடம் மாறி வந்த ஸ்டெய்ன், நீண்ட இடைவெளிக்கு பின் ஐபிஎல் தொடருக்கு திரும்பியதோடு, சுமார் 9 ஆண்டுகள் கழித்து மீண்டும் பெங்களூர் அணிக்காக ஆடினார்.

ஆறுதல்

ஆறுதல்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கிட்டத்தட்ட பிளே-ஆஃப் செல்லும் வாய்ப்பை நழுவ விட்டு விட்டது. இருந்தாலும், அடுத்து உள்ள போட்டிகளில் ஆறுதல் வெற்றி பெற்று நம்பிக்கையை மீட்கும் முயற்சியில் இறங்கி உள்ளது.

பெங்களூர் ரன் குவிப்பு

பெங்களூர் ரன் குவிப்பு

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டேல் ஸ்டெய்ன் பங்கேற்றார். இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் மொயீன் அலி 28 பந்துகளில் 66 ரன்கள், கோலி 58 பந்துகளில் 100 ரன்கள் சேர்த்தனர். பெங்களூர் அணி 20 ஓவர்களில் 213 ரன்கள் எடுத்தது.

கடைசி ஓவர் வரை..

கடைசி ஓவர் வரை..

கொல்கத்தா வெற்றி பெறுவது கடினம் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், ரஸ்ஸல், ராணா அதிரடியாக ஆடி போட்டியை கடைசி ஓவர் வரை எடுத்துச் சென்றனர். எனினும், 10 ரன்களில் கொல்கத்தா தோல்வி அடைந்தது.

3 விக்கெட்கள்

3 விக்கெட்கள்

கொல்கத்தா அணி 214 இலக்கை நோக்கி ஆடி வந்த போது, 5 ஓவர்களில் 33 ரன்களுக்கு 3 விக்கெட்கள் இழந்து தவித்து வந்தது. அடுத்து அந்த அணியால் ரன் சேர்க்க முடியவில்லை. 10 ஓவர்களில் 60 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அப்படி இருந்தும் கடைசி ஓவர் வரை சென்று 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

எளிதாக வென்றிருக்கும்

எளிதாக வென்றிருக்கும்

ஒருவேளை கொல்கத்தா அணி 5 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழக்காமல் இருந்திருந்தால், இந்தப் போட்டியில் எளிதாக வென்றிருக்கும். அந்த மூன்று விக்கெட்களில் இரண்டை வீழ்த்தியவர் டேல் ஸ்டெய்ன்.

நல்ல வேளை

நல்ல வேளை

அவர் மட்டும் இந்தப் போட்டியில் பங்கேற்காமல் போயிருந்தால், பெங்களூர் அணி 213 ரன்கள் அடித்தும் தோல்வி அடைந்து, தன் மோசமான தோல்விகள் வரிசையை அதிகப்படுத்தி இருக்கும். இந்தப் போட்டி அவமானமாகவும் மாறி இருக்கும். நல்லவேளையாக ஸ்டெய்னின் துவக்க ஓவர்கள் பெங்களூர் அணியை காப்பாற்றியது.

Story first published: Saturday, April 20, 2019, 0:31 [IST]
Other articles published on Apr 20, 2019
English summary
IPL 2019 KKR vs RCB : Dale Steyn returns to IPL after 9 years
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+