For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நம்பவே முடியலை.. இப்படி மோசமா ஆடுறாரே!! தயவுசெய்து இவரை உலகக்கோப்பை டீம்ல இருந்து தூக்குங்க!!

கொல்கத்தா : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடி வரும் இந்திய அணியின் முன்னணி சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் குல்தீப் யாதவ்வின் பந்துவீச்சு சரியாக இல்லை. ரன்களை வாரி இறைத்து வருவதோடு, விக்கெட்களிலும் பெரிதாக எந்த தாக்கமும் இல்லை.

குல்தீப் யாதவ் பந்துவீச்சு

குல்தீப் யாதவ் பந்துவீச்சு

இந்த நிலையில், பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் குல்தீப் யாதவ் 4 ஓவர்கள் பந்து வீசி 59 ரன்கள் கொடுத்தார். 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார். ஓவருக்கு 14+ ரன்கள் கொடுத்து அதிர்ச்சி அளித்தார்.

கண்கலங்கினார்

கண்கலங்கினார்

மொயீன் அலி அவரது ஓவரில் 26 ரன்கள் சேர்த்து, அவரை கண்கலங்க வைத்தார். அந்த ஓவரின் முடிவில் மொயீன் அலி விக்கெட்டை எடுத்தாலும், குல்தீப் யாதவ் மனமுடைந்து, கண் கலங்கினார். ரசிகர்கள் குல்தீப் யாதவ்வின் மோசமான பந்துவீச்சை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

நம்ப முடியவில்லை

குல்தீப் யாதவ் இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளர். டி20 மற்றும் ஒருநாள் போட்டி தரவரிசையிலும் முன்னணியில் இருப்பவர். அவர் ஐபிஎல் தொடரில் மிக மோசமாக பந்துவீசி வருவதை ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. அதை பலரும் சமூக வலைத்தளத்தில் வெளிப்படுத்தியுள்ளனர். மிக மோசமான, நம்ப முடியாத செயல்பாடு என விமர்சித்துள்ளனர்.

நீக்க வேண்டும்

இந்திய அணிக்கு முக்கிய பந்துவீச்சாளராக இருக்கும் குல்தீப் யாதவ், உலகக்கோப்பை அணியிலும் இடம் பிடித்துள்ளார். சில ரசிகர்கள் குல்தீப்பை உலகக்கோப்பை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்றெல்லாம் கூறி வருகிறார்கள்.

தோனி இருந்தால்..

சில தோனி ரசிகர்கள், குல்தீப் யாதவ், தோனி இருக்கும் போது முற்றிலும் வேறு பந்துவீச்சாளராக இருக்கிறார் என கூறியுள்ளனர். தோனி இருந்தால், குல்தீப் அந்த போட்டியில் ஆதிக்கம் செலுத்துவார் என்பதும் உண்மையே!

Story first published: Saturday, April 20, 2019, 17:51 [IST]
Other articles published on Apr 20, 2019
English summary
IPL 2019 KKR vs RCB : Fans unhappy with Kuldeep Yadav bowling performance in IPL
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+