For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடப்பாவமே! வெளுத்துக் கட்டிய மொயீன் அலி.. மனமுடைந்து.. சோர்ந்து.. கண்கலங்கிய குல்தீப் யாதவ்!!

கொல்கத்தா : 2019 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா - பெங்களூர் மோதிய 35வது லீக் போட்டியில் சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் கண்ணீர் விட்ட சம்பவம் நடந்தேறி உள்ளது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி அதிரடியாக ஆடியது. கேப்டன் கோலி, மொயீன் அலி ரன் மழை பொழிந்தனர்.

மொயீன் அலி அதிரடி

மொயீன் அலி அதிரடி

கொல்கத்தா வீரர் குல்தீப் யாதவ் 16வது ஓவரை வீசினார். அந்த ஓவரை சந்தித்த மொயீன் அலி, ஐந்து பவுண்டரி அடித்து குல்தீப்பை திகைக்க வைத்தார். இரண்டு ஃபோர், மூன்று சிக்ஸ் அடித்தார் மொயீன் அலி. கடைசி பந்தில் மொயீன் அலி விக்கெட்டை எடுத்தார் குல்தீப்.

மனமுடைந்தார்

மனமுடைந்தார்

குல்தீப் ஒரு வைடு பந்தும் வீச அந்த ஓவரில் 27 ரன்கள் எடுத்தது பெங்களூர். இந்த சீசன் முழுவதும் படு மோசமாக ரன்னை வாரி இறைத்து வரும் குல்தீப் யாதவ், அந்த ஓவரின் முடிவில் மனமுடைந்து காணப்பட்டார்.

கண் கலங்கினார்

அவர் கண்கலங்கியது வெளிப்படையாக தெரிந்தது. மொயீன் அலி விக்கெட்டை எடுத்தாலும், அது அவரது மனதை சமாதானப்படுத்தவில்லை. அவரை கொல்கத்தா வீரர்கள் கிறிஸ் லின், பிரசித் கிருஷ்ணா, ரஸ்ஸல் சாந்தப்படுத்த முயற்சி செய்தனர்.

சோர்ந்து விட்டார்

சோர்ந்து விட்டார்

எனினும், குல்தீப் யாதவ் தொடர்ந்து சோர்ந்து காணப்பட்டார். பவுண்டரி அருகே நின்று பீல்டிங் செய்த அவரால், சரியாக ஓடக் கூட முடியவில்லை. இந்திய அணியின் முன்னணி சுழற் பந்துவீச்சாளராக வலம் வரும் குல்தீப் யாதவ், இந்த ஐபிஎல் சீசனில் தடுமாறி வருகிறார்.

மோசமான சராசரி

மோசமான சராசரி

கடந்த 2016 சீசனில் 12 விக்கெட்கள், 2017 சீசனில் 17 விக்கெட்கள் வீழ்த்தினார் குல்தீப் யாதவ். ஆனால், 2019இல் இதுவரை 4 விக்கெட்கள் மட்டுமே வீழ்த்தி உள்ளார். அவரது பந்துவீச்சு சராசரி மிக மோசமாக 71.50 என்ற அளவில் இருக்கிறது.

தலைகீழ்

தலைகீழ்

குல்தீப் யாதவ் இந்திய டெஸ்ட் அணியில் அஸ்வினை விட முக்கிய பந்துவீச்சாளர் என ரவி சாஸ்திரி பேட்டி எல்லாம் கொடுத்த நிலையில், தற்போது அவரது நிலைமை ஐபிஎல்-இல் தலைகீழாக மாறி உள்ளது. சிலர் தோனி இருந்தால் தான் குல்தீப் சரியாக பந்து வீசுவார் என விமர்சித்து வருகின்றனர்.

Story first published: Saturday, April 20, 2019, 11:17 [IST]
Other articles published on Apr 20, 2019
English summary
IPL 2019 KKR vs RCB : Kuldeep Yadav broken down after Moeen ali scored 26 runs of his over
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+