Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்!!

கொல்கத்தா : 2019 ஐபிஎல் தொடரின் 35வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.

1
45911

இந்தப் போட்டியில் இரு அணிகளுமே 200 ரன்களைக் கடந்து அதிரடி காட்டின. அதிரடியாக ரன் குவிக்கும் போட்டிகளை விரும்பும் டி20 ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது இந்தப் போட்டி.

பெங்களூர் பேட்டிங்

பெங்களூர் பேட்டிங்

டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பெங்களூர் அணியின் பேட்டிங்கில் பார்த்திவ் பட்டேல் 11, அக்ஷ்தீப் நாத் 13 ரன்களில் வெளியேறி ஏமாற்றினர். எனினும், விராட் கோலி, மொயீன் அலி அதிரடியாக ஆடினர்.

மொயீன் அலி - கோலி

மொயீன் அலி - கோலி

கோலி கடைசி பந்து வரை நின்று சதம் அடித்து ஆட்டமிழந்தார். 57 பந்துகளில் சதம் கடந்தார் கோலி. இது அவரது 5வது ஐபிஎல் சதம் ஆகும். மொயீன் அலி 28 பந்துகளில் 66 ரன்கள் குவித்து மிரள வைத்தார். மொயீன் 6, கோலி 4 சிக்ஸர்கள் அடித்தனர்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

20 ஓவர்களில் பெங்களூர் அணி 213 ரன்கள் சேர்த்தது. 214 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. கிறிஸ் லின் 1, சுனில் நரைன் 18, ஷுப்மன் கில் 9, ராபின் உத்தப்பா 9 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.

ரன் தேவை

ரன் தேவை

12வது ஓவரில் ரஸ்ஸல் களமிறங்கினார். அதுவரை மிதமான வேகத்தில் ரன் சேர்த்து வந்த ராணா அவருடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக ரன் சேர்க்க, ஓவருக்கு 18-19 ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்த கொல்கத்தா மெல்ல மேலே எழும்பியது.

அடித்து நொறுக்கினர்

அடித்து நொறுக்கினர்

ஓவருக்கு 18-19 ரன்கள் எல்லாம் எந்த அணியாலும் சேர்க்க முடியாது என்ற பேச்சை சுக்கல், சுக்கலாக அடித்து நொறுக்கியது ரஸ்ஸல் - ராணா ஜோடி. கடைசி 2 ஓவர்களில் 43 ரன்கள் தேவை என்ற நிலைக்கு சென்றது போட்டி. பின்னர் 8 பந்துகளில் 36 ரன்கள், 6 பந்துகளில் 24 ரன்கள் தேவை என ரன் தேவை பந்துக்கு, பந்து குறைந்து வந்தது.

திணறல்

திணறல்

கடைசி ஓவரில் 24 ரன்கள் தேவை என்ற நிலையில், ராணா, ரஸ்ஸல் இந்த ஓவரில் சிக்ஸ் அடிக்க முடியாமல் திணற, போட்டி கொல்கத்தா அணியின் கைகளில் இருந்து நழுவியது.

கடைசி ஓவர் வரை..

கடைசி ஓவர் வரை..

10 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் வெற்றி பெற்றது. 213 ரன்கள் சேர்த்தாலும், மோசமான பந்துவீச்சால், கேப்டன்சியால் பெங்களூர் அணி கடைசி ஓவர் வரை போட்டியை எடுத்துச் சென்றது.

Story first published: Saturday, April 20, 2019, 0:38 [IST]
Other articles published on Apr 20, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+