For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்கிட்ட இதெல்லாம் நடக்காது.. சுனில் நரைனை பப்ளிக்காக கலாய்த்த செஞ்சுரி நாயகன் கோலி!

கொல்கத்தா : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் போட்டியில் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி சதம் அடித்து கலக்கினார்.

இந்தப் போட்டியில் கோலி பேட்டிங் செய்து வந்த போது, கொல்கத்தா வீரர் சுனில் நரைன் அவரை மன்கட் ரன் அவுட் எச்சரிக்கை செய்தார். ஆனால், கோலி படு உஷாராக நடந்து கொண்டதோடு, அவரை கலாய்த்து அனுப்பினார்.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

18வது ஓவரை வீசினார் சுனில் நரைன். அந்த ஓவரின் ஐந்தாவது பந்தை அவர் வீசும் போது கோலி, பந்துவீச்சாளர் முனையில் இருந்தார். சுனில் நரைன் ஓடி வரும் போது கோலி ஒரு அடி முன்னே நகர்ந்தார்.

உறுதி செய்த கோலி

உறுதி செய்த கோலி

சுனில் நரைன் பந்துவீசாமல் மெதுவாக ஓடி நின்றார். விராட் கோலி அப்போது உஷாராக தன் பேட்டை கிரீஸ்-க்குள் தான் வைத்திருந்தார். அதை உறுதி செய்த கோலி, அப்படியே திரும்பி நின்று பேட்டை முழுவதுமாக கிரீஸ்-க்குள் வைத்து, அமர்ந்தார்.

கலாய்த்த கோலி

கலாய்த்த கோலி

தன்னை மன்கட் ரன் அவுட் செய்ய முடியாது என சூசகமாக சொல்லி, சுனில் நரைனை கலாய்த்தார் கோலி. சுனில் நரைன் நேரடியாக எச்சரிக்கை செய்யாவிட்டாலும், அவரது மறைமுக எச்சரிக்கைக்கே கோலி பதிலடி கொடுத்தார்.

அசத்தல் 5வது சதம்

அசத்தல் 5வது சதம்

அதன் பின் 20வது ஓவரின் 5வது பந்தில் சதம் கடந்து அசத்தினார் கோலி. 57 பந்துகளில் சதம் கடந்தார் கோலி. இது ஐபிஎல் தொடரில் கோலி அடிக்கும் ஐந்தாவது சதம் ஆகும். இதன் மூலம் அதிக ஐபிஎல் சதம் அடித்தவர்கள் பட்டியலில், கிறிஸ் கெயிலுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார் கோலி.

Story first published: Friday, April 19, 2019, 23:42 [IST]
Other articles published on Apr 19, 2019
English summary
IPL 2019 KKR vs RCB : Virat Kohli escape from Sunil Narine Mankading
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+