யப்பா சாமி.. இதுக்கு மேல தாங்காது.. டக்-அவுட் மன்னனை கழட்டி விட்ட ராஜஸ்தான் ராயல்ஸ்!
கொல்கத்தா : 2019 ஐபிஎல் தொடரில் மூன்று போட்டிகளில் வாய்ப்பு பெற்ற ராஜஸ்தான் அணி வீரர் ஆஷ்டன் டர்னர், கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் தன் வாய்ப்பை இழந்தார்.
ஆஸ்திரேலிய வீரர் ஆஷ்டன் டர்னர் அதிரடி வீரர் என்ற பெயருடன் ராஜஸ்தான் அணிக்கு வந்தார். அவர் சரியாக ரன் குவிக்காமல் போயிருந்தால் கூட பரவாயில்லை. ரன்னே அடிக்கவில்லை என்பது தான் பெரிய காமெடியாக மாறியுள்ளது.

முதல் பந்திலேயே..
மூன்று போட்டிகளிலும் ரன் ஏதும் எடுக்காமல், தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார் டர்னர். ஒன்றிரண்டு பந்து சந்தித்து அதன் பின் டக் அவுட் ஆகி இருந்தால் கூட பரவாயில்லை என நினைத்திருக்கலாம்.

பரிதாப நிலை
ஆனால், ஒரு பேட்ஸ்மேன் தொடர்ந்து மூன்று போட்டிகளில் முதல் பந்தில் டக்-அவுட் ஆனது எப்படி சாத்தியம் என்றே புரியாமல் கிரிக்கெட் உலகம் டர்னரை பரிதாபமாக பார்த்துக் கொண்டு இருக்கிறது.

இனிமேல் தாங்காது
ஆஷ்டன் டர்னரால் கடுமையாக பாதிக்கப்பட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இனிமேல் தாங்காது என கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் அவரை கழட்டிவிட்டனர். ஆஷ்டன் டர்னர், ஐபிஎல் தொடரில் எடுத்த மூன்று டக்-அவுட்கள் மட்டுமின்றி தான் ஆடிய கடைசி பத்து போட்டிகளில் இரண்டு டக்-அவுட் ஆகியுள்ளார்.

ஒலிம்பிக் முத்திரை
ஐபிஎல்-லுக்கு முன் இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரிலும், பிக் பாஷ் லீக் டி20 தொடரிலும் தலா ஒரு முறை டக்-அவுட் ஆகியுள்ளார். ரசிகர்கள் சிலர் இவர் பத்து போட்டிகளில் ஐந்து டக்-அவுட்கள் ஆனதை ஒலிம்பிக் முத்திரையின் ஐந்து வட்டங்களோடு ஒப்பிட்டு கலாய்த்து வருகிறார்கள்.

வாய்ப்பும் போச்சு
இதில் மேலும் பரிதாபம் என்னவென்றால், உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் கிடைக்காவிட்டாலும், ஐபிஎல் தொடரில் ரன் குவித்து எப்படியாவது மாற்று வீரராக அணியில் நுழையலாம் என திட்டமிட்டு வைத்திருந்தார் டர்னர். மூன்று கோல்டன் டக்-அவுட்டால் அந்த எண்ணத்தில் அவரே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications