Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவரு அடிச்சு ஆடுவாருன்னு தெரியும்.. ஆனா இப்படி அடிப்பாருன்னு நினைச்சு கூட பார்க்கலையே!

கொல்கத்தா : ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் மிரட்டல் பேட்டிங் செய்தார்.

தன் அணியின் பேட்ஸ்மேன்கள் ஒருவர் கூட நிலைத்து ரன் குவிக்காத நிலையில் தனியாளாக போட்டியை தோளில் சுமந்து கேப்டன் இன்னிங்க்ஸ் ஆடிக் காட்டினார் தினேஷ் கார்த்திக்.

மோசமான துவக்கம்

மோசமான துவக்கம்

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணிக்கு கிறிஸ் லின் 0, ஷுப்மன் கில் 14 ரன்களில் ஆட்டமிழந்து மோசமான துவக்கம் அளித்தனர். அப்போது நான்காவது வரிசையில் பேட்டிங் செய்ய களமிறங்கினார் கேப்டன் தினேஷ் கார்த்திக்.

தினேஷ் அரைசதம்

தினேஷ் அரைசதம்

அடுத்த சில ஓவர்களில் அணியின் ரன் ரேட் ஐந்துக்கும் கீழே சென்றது. அதையடுத்து அதிரடி காட்டத் துவங்கினார் தினேஷ் கார்த்திக். தொடர்ந்து அதிரடியாக ஆடிய தினேஷ் கார்த்திக், 35 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

இன்னும் அதிரடி

இன்னும் அதிரடி

கடைசி நான்கு ஓவர்களில் கியரை இன்னும் வேகத்துக்கு மாற்றிய தினேஷ், அடுத்த 15 பந்துகளில் மட்டும் 47 ரன்கள் குவித்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்ற அவர் 50 பந்துகளில் 97 ரன்கள் குவித்திருந்தார்.

பார்க்காத அதிரடி

பார்க்காத அதிரடி

அதில் 7 ஃபோர் மற்றும் 9 சிக்ஸ் அடங்கும். தினேஷ் கார்த்திக் அவ்வப்போது இந்திய அணிக்காகவும், கொல்கத்தா அணிக்காகவும் அதிரடியாக ஆடி உள்ளார். ஆனால், இந்தளவு நீண்ட நேரம் களத்தில் நின்று 90 ரன்களுக்கும் மேல் அவர் அடித்து யாரும் அதிகம் பார்த்ததில்லை.

விமர்சனத்துக்கு பதிலடி

விமர்சனத்துக்கு பதிலடி

தினேஷ் கார்த்திக் உலகக்கோப்பை அணிக்கு தேர்வு செய்யப்பட்ட போது பலரும் அந்த முடிவை விமர்சித்து இருந்தனர். ஆனால், அந்த விமர்சனத்தை எல்லாம் இந்த இன்னிங்க்ஸ் மூலம் அடித்து நொறுக்கியுள்ளார்.

Story first published: Friday, April 26, 2019, 0:06 [IST]
Other articles published on Apr 26, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+