Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அப்ப என்னவோ கேள்வி கேட்டீங்களே.. இப்ப பேசுங்க.. தினேஷ் கார்த்திக்கிற்கு பெருகும் ரசிகர்கள் ஆதரவு!

Recommended Video

தினேஷ் கார்த்திக்கிற்கு பெருகும் ரசிகர்கள் ஆதரவு | IPL 2019 Kolkata vs Rajasthan

கொல்கத்தா : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக், உலகக்கோப்பை அணியிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

1
45919

பலரும், ரிஷப் பண்ட்டை தாண்டி, தினேஷ் கார்த்திக்கை உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்தது தவறு என கூறி வந்தனர். தினேஷ் கார்த்திக் சரியாக ரன் குவிப்பதில்லை என காரணம் கூறி வந்தனர்.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

ஆனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கேப்டன் இன்னிங்க்ஸ் ஆடிய தினேஷ் கார்த்திக் அதிரடியாக 50 பந்துகளில் 97 ரன்கள் குவித்தார். அந்தப் போட்டியில் கொல்கத்தா அணி தோல்வி அடைந்தாலும், தினேஷ் கார்த்திக் ஆடிய ஆட்டம் அவர் மீதான விமர்சனங்களை ஓரங்கட்டியுள்ளது.

நீங்களே ஆடுங்க

தினேஷ் கார்த்திக் ரசிகர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் பலரும் தினேஷ் கார்த்திக் ஆட்டத்தை புகழ்ந்து வருகிறார்கள். அவற்றில் சில -

ஒரு ரிஷப் பண்ட் ரசிகர் இப்படி கூறியுள்ளார். "சரி.. தினேஷ் கார்த்திக்.. நீங்க உலகக்கோப்பையில் ஆடுங்க.. - ரிஷப் பண்ட் ரசிகர்"

இப்ப பேசுங்க

ஒருவர், தினேஷ் கார்த்திக் உலகக்கோப்பையில் சேர்க்கப்பட்டதை கேள்வி கெட்டவர்கள் எல்லாம் இப்ப பேசுங்க.. என கெத்தாக கேட்டுள்ளார்.

இன்னுமா ஆச்சரியம்?

சஞ்சய் மஞ்ச்ரேக்கர், தினேஷ் கார்த்திக் உலகக்கோப்பை அணிக்கு தேர்வு செய்யப்பட்டதை ஆச்சரியம் அளிக்கிறது என கூறி இருந்தார். அதை கிண்டல் செய்து, "இன்னுமா ஆச்சரியமா இருக்கு?" என கேட்டுள்ளார்.

கேப்டன் இன்னிங்க்ஸ்

கேப்டன் இன்னிங்க்ஸ் ஆடி விட்டார். இதே பார்மில் உலகக்கோப்பையில் ஆட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார் ஒரு ரசிகர்.

Story first published: Friday, April 26, 2019, 13:25 [IST]
Other articles published on Apr 26, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+