என்ன கொடுமை சார்.. சிஎஸ்கே-னா கோலிக்கு அல்வா சாப்பிடுற மாதிரி.. ஆனா அவர் டீம் மட்டும் ஜெயிக்காது!
Recommended Video

சென்னை : 2019 ஐபிஎல் தொடரின் முதல் போட்டி இன்று நடைபெற உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மோத உள்ள இந்த போட்டியில் சென்னை அணி தான் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
காரணம், இந்த இரண்டு அணிகளுக்கும் இடையே நடந்த முந்தைய போட்டிகளின் வெற்றி - தோல்வி வரலாறு அப்படி இருக்கிறது.

சென்னை அணியின் வில்லன்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை புரட்டி எடுத்த பேட்ஸ்மேன்களில் முதல் இடம் பிடித்துள்ளவர் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி. அவர் சென்னை அணிக்கு எதிராக 21 இன்னிங்க்ஸ்களில் 732 ரன்கள் குவித்துள்ளார்.

புரட்டி எடுத்துள்ளார்
மேலும், கோலி 6 அரைசதம், 12 முறை 30+ ரன்கள், பேட்டிங் சராசரி 40.66 என சென்னை அணியை புரட்டி எடுத்துள்ளார். சென்னை அணிக்கு ஆப்பு வைக்கும் பேட்ஸ்மேன் என பெயர் எடுத்திருந்தாலும், அவரது அணியால் சென்னை அணியை அதிக போட்டிகளில் வீழ்த்த முடியவில்லை என்பதே உண்மை.

தோல்விகள்
பெங்களூர் அணி கடைசியாக 2014இல் தான் சென்னை அணியை வீழ்த்தி உள்ளது. அதே போல, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஏழு போட்டிகளில், ஆறு போட்டிகளில் சென்னை அணியிடம் தோல்வி அடைந்துள்ளது பெங்களூர்.

வீண்
ஆக, சென்னை அணிக்கு எதிராக கோலி அடித்த ரன்கள் முக்கால்வாசி வீண். 2019 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலும் சென்னை அணி தான் வெல்லும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications