கேதார் ஜாதவ்வுக்கு இனி ஐபிஎல் இல்லை.. உலகக்கோப்பையும் சந்தேகம் தான்.. பதறும் ரசிகர்கள்.. என்ன ஆச்சு?
Recommended Video
கேதார் ஜாதவ்வுக்கு இனி ஐபிஎல் இல்லை.. உலகக்கோப்பையும் சந்தேகம் தான்.. பதறும் ரசிகர்கள்.. என்ன ஆச்சு?
சண்டிகர் : 2019 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி வந்த இந்திய அணி வீரர் கேதார் ஜாதவ், பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டியின் போது பீல்டிங்கில் காயம் அடைந்தார்.
சென்னை அணியின் பயிற்சியாளர் பிளெம்மிங், இந்த சீசன் ஐபிஎல் தொடரில் இனி ஜாதவ் பங்கேற்க மாட்டார் என அறிவித்தும் விட்டார். இதனால், உலகக்கோப்பை தொடரில் ஜாதவ் பங்கேற்பாரா? என ரசிகர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

பலத்த காயம்
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், பீல்டிங் செய்து வந்த போது, 14வது ஓவரில் ஓவர்த்ரோ பந்தை பிடிக்க முயற்சி செய்த கேதார் ஜாதவ், தோள்பட்டையில் பலத்த காயமடைந்தார்.

பதற்றம்
வலியால் துடித்த அவர், ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். உலகக்கோப்பை அணியின் இடம் பெற்றுள்ள, அவருக்கு என்ன ஆனதோ என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பதற்றம் அடைந்தனர். போட்டி முடிந்தவுடன் அது குறித்து விளக்கம் அளித்தார் பிளெம்மிங்.

என்ன நிலை?
திங்கள்கிழமை அன்று எக்ஸ்-ரே, ஸ்கேன் எடுக்க உள்ளதாகவும், எதுவும் பெரிதாக இருக்காது என நம்புவதாகவும் கூறினார் பிளெம்மிங். மேலும், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இனி ஜாதவ் பங்கேற்க மாட்டார். உலகக்கோப்பை நோக்கி அவர் திரும்புவார் எனவும் கூறினார்.

ஐபிஎல் பார்ம்
நடப்பு ஐபிஎல் தொடரில் ஜாதவ் படுமோசமாக பேட்டிங் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. உலகக்கோப்பை தொடருக்கு தேர்வாகி விட்ட நிலையில், ஐபிஎல் பார்ம் குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் என்ற சூழ்நிலை இருந்தது.

மாற்றம் இருக்கலாம்
ஆனால், இப்போது காயத்தை காரணம் காட்டி அவரை கழட்டி விட்டு மாற்று வீரரை தேர்வு செய்யவும் அதிக வாய்ப்புள்ளது. அதே சமயம், ஜாதவ் சிறந்த பேட்டிங் - ஆல்-ரவுண்டர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும், ஜாதவ் இந்திய அணியில் ஆட வேண்டும் என நினைக்கும் பெரும்பாலான ரசிகர்கள், அவரது காயம் குறித்து கவலை அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications