Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அஸ்வினை கைவிட்ட ராகுல், கெயில்.. வெளுத்த கிறிஸ் லின்.. பொறுமை இல்லாத தினேஷ் கார்த்திக்! #KXIPvsKKR

சண்டிகர் : 2019 ஐபிஎல் தொடரில் கிட்டத்தட்ட வாழ்வா, சாவா என்ற நிலையில் நடைபெற்றது கிங்ஸ் லெவன் பஞ்சாப் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே ஆன 52வது லீக் போட்டி.

புள்ளிப்பட்டியலில் வெறும் பத்து புள்ளிகளுடன் இருக்கும் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் இந்த போட்டியில் வென்றால் மட்டுமே, பிளே-ஆஃப் வாய்ப்பு தற்காலிகமாக பிரகாசமாகும் என்ற நிலையில் மோதின.

ரன் குவிப்பு

ரன் குவிப்பு

அடுத்து மாயங்க் அகர்வால் 36, நிக்கோலஸ் பூரன் 48 ரன்கள் குவித்து அணியை நல்ல நிலைக்கு எடுத்துச் சென்றனர். கடைசி 6 ஓவர்களில் மந்தீப் சிங், சாம் கர்ரன் ரன் குவிப்பில் ஈடுபட்டனர். சாம் கர்ரன் 24 பந்துகளில் 55 ரன்கள் குவித்து, கொல்கத்தா அணியை மிரட்டினார். கடைசி ஓவரில் மட்டும் 22 ரன்கள் குவித்தார் கர்ரன்.

ரன் குவிப்பு

ரன் குவிப்பு

அடுத்து மாயங்க் அகர்வால் 36, நிக்கோலஸ் பூரன் 48 ரன்கள் குவித்து அணியை நல்ல நிலைக்கு எடுத்துச் சென்றனர். கடைசி 6 ஓவர்களில் மந்தீப் சிங், சாம் கர்ரன் ரன் குவிப்பில் ஈடுபட்டனர். சாம் கர்ரன் 24 பந்துகளில் 55 ரன்கள் குவித்து, கொல்கத்தா அணியை மிரட்டினார். கடைசி ஓவரில் மட்டும் 22 ரன்கள் குவித்தார் கர்ரன்.

சூப்பர் பேட்டிங்

சூப்பர் பேட்டிங்

20 ஓவர்களில் பஞ்சாப் அணி 183 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணிக்கு 184 ரன்கள் என்ற இலக்கு சவாலாக இருக்காது என்றே பலரும் எண்ணினர். அதற்கேற்ப, துவக்க வீரர்கள் ஷுப்மன் கில் 65*, கிறிஸ் லின் 46 ரன்கள் குவித்தனர். உத்தப்பா 22, ரஸ்ஸல் 24 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினர்.

கடைசி 18 ரன்கள்

கடைசி 18 ரன்கள்

தினேஷ் கார்த்திக் அடுத்து களமிறங்கினார். ஒரு கட்டத்தில் 18 பந்துகளில் 18 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. மற்ற அணிகளாக இருந்தால், இந்த நேரத்தில் விக்கெட்டை இழந்துவிடக் கூடாது என பவுண்டரியை குறைத்து, "சிங்கிள்" ஓடத் துவங்கி இருப்பார்கள்.

பொறுமை இல்லை

பொறுமை இல்லை

ஆனால், கேப்டன் தினேஷ் கார்த்திக்குக்கு அந்த பொறுமை எல்லாம் இல்லை. 18 ரன்களையும், 18வது ஓவரிலேயே எடுத்து போட்டியை வெற்றிகரமாக முடித்தார். 9 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் நின்றார் தினேஷ் கார்த்திக்.

பிளே-ஆஃப் நிலை

பிளே-ஆஃப் நிலை

இந்த வெற்றி மூலம் கொல்கத்தா அணி 12 புள்ளிகளுடன், பிளே-ஆஃப் வாய்ப்பை சற்றே அதிகப்படுத்திக் கொண்டுள்ளது. தோல்வி அடைந்து 10 புள்ளிகளுடன் இருக்கும் பஞ்சாப் அணி பிளே-ஆஃப் செல்வது மிக மிகக் கடினம்.

Story first published: Saturday, May 4, 2019, 0:04 [IST]
Other articles published on May 4, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+