For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

போராடி ஜெயிச்சுட்டு.. 12 லட்சம் அபராதம் கட்டிட்டு வந்த விராட் கோலி! எதுக்கு தெரியுமா?

Recommended Video

பெங்களூரு அணி கேப்டன் கோஹ்லிக்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம்

மொஹாலி : 2019 ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணி, பஞ்சாப் அணியை வீழ்த்தி தன் முதல் வெற்றியை போராடி பதிவு செய்தது.

தான் ஆடிய முதல் ஆறு போட்டிகளிலும் தோல்வி அடைந்த பெங்களூர் அணி, ஏழாவது போட்டியில் தான் முதல் வெற்றியை பதிவு செய்தது. ஆனால், இதே போட்டிக்குப் பின் பெங்களூர் அணி கேப்டன் கோலிக்கு அபராதம் விதித்தது ஐபிஎல் நிர்வாகம்..

ஐபிஎல் ஓவர் விதி

ஐபிஎல் ஓவர் விதி

ஐபிஎல் விதிகளின்படி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசும் அணி ஓவர்களை வீசி முடிக்க வேண்டும். குறிப்பிட்ட கால அளவைத் தாண்டி இன்னிங்க்ஸ் நீண்டு கொண்டே சென்றால், எந்த பந்துவீசும் அணி அதிக நேரம் எடுத்துக் கொண்டதோ அந்த அணியின் கேப்டனுக்கு அபராதம் விதிக்கபடுகிறது.

அதிக நேரம்

அதிக நேரம்

அந்த வகையில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பந்துவீசிய பெங்களூர் அணி அதிக நேரம் எடுத்துக் கொண்டது. அதனால் முதல் இன்னிங்க்ஸ் முடிய இரவு 9.45 ஆனது. சுமார் 15 நிமிடம் அதிக நேரம் எடுத்துக் கொண்டுள்ளது பெங்களூர்.

12 லட்சம் அபராதம்

12 லட்சம் அபராதம்

எனவே, முதல் முறையாக இந்த தவறை செய்யும் பெங்களூர் அணி கேப்டன் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்தத் தொகையை கேப்டன் தனது கணக்கில் இருந்து கொடுக்கமாட்டார். ஐபிஎல் அணி உரிமையாளர்களே இதை ஏற்றுக் கொள்வார்கள் என சிலர் கூறுகிறார்கள்.

சாதாரணத் தொகை

சாதாரணத் தொகை

இது சாமானிய மக்களுக்கு பெரிய தொகையாக தெரிந்தாலும், ஐபிஎல் அணிகளுக்கு சாதாரணத் தொகை மட்டுமே. வெற்றி பெற்றால் போதும். இந்த "இதர செலவினங்கள்" எல்லாம் அவர்களுக்கு பொருட்டல்ல என்பது போலத் தான் இருக்கிறது.

அபராதம் கட்டியவர்கள்

அபராதம் கட்டியவர்கள்

ஏற்கனவே, இந்த சீசனில் ராஜஸ்தான் கேப்டன் ரஹானே, மும்பை கேப்டன் ரோஹித் சர்மா ஓவர்களை வீசி முடிக்க அதிக நேரம் எடுத்துக் கொண்டதற்காக அபராதம் கட்டி இருக்கிறார்கள். கோலி அந்த வரிசையில் இணைந்துள்ளார்.

Story first published: Sunday, April 14, 2019, 13:10 [IST]
Other articles published on Apr 14, 2019
English summary
IPL 2019 KXIP vs RCB : Virat Kohli fined for slow over rate
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+