என்னப்பா இது.. அஸ்வினை கட்டாயப்படுத்தி பாங்க்ரா டான்ஸ் ஆடச் சொன்னா குத்து டான்ஸ் ஆடறாரு?
மொஹாலி : 2019 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை இரண்டாவது முறையாக வீழ்த்தி வெற்றிக் களிப்பில் உள்ளது.
தான் ஆடிய ஒன்பது போட்டிகளில் பஞ்சாப் அணி ஐந்து வெற்றிகளை பெற்றுள்ளது. எப்படியும் பிளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைந்து விடலாம் என பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் நம்பிக்கையுடன் இருக்கிறார்.

பாட்டும், கூத்தும்
இந்த நிலையில், ராஜஸ்தான் அணிக்கு எதிராக வெற்றி பெற்ற பின் பஞ்சாப் அணியினர் ஏக மகிழ்ச்சியில் திளைத்தனர். ஒரே பாட்டும், கூத்துமாக அசத்தினர். சிறப்பாக ஆடிய வீரர்கள், ஒரு பக்கம் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா உடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

பாங்க்ரா நடனம்
மறுபக்கம், பஞ்சாப் மாநிலத்தின் பாங்க்ரா இசைக் கலைஞர்கள் இசைத்துக் கொண்டு இருந்தனர். எந்த ஐபிஎல் போட்டியில் வென்றாலும், பஞ்சாப் அணியில் பாங்க்ரா ஆடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

முயற்சி
இந்த முறை ராஜஸ்தான் போட்டியில் தெறிக்க விட்டு ஆட்டநாயகன் விருது வென்ற அஸ்வினை ஆட வைக்க முயற்சி செய்தார் பாலிவுட் நடிகர் சோனு சூட். அஸ்வினை வலுக்கட்டாயமாக அழைத்து வந்து ஆடச் சொன்னார்.
குத்து டான்ஸ்
அஸ்வின் பொதுவாக ஆட மாட்டாரே என நினைத்துக் கொண்டு இருந்த போது, கையை மேலே தூக்கி... பாங்க்ரா டான்ஸ் ஆடுவதற்குப் பதில், நம்ம ஊர் குத்து டான்ஸ் போல ஏதோ ஆடினார். கடைசியில், பாங்க்ரா இசைக் கலைஞர் ஒருவரின் வாத்தியத்தில் ஏறி உட்கார்ந்து சவாரி செய்து சிரித்தார். டான்ஸ் ஆட வரலைனா பரவாயில்லை அஸ்வின்.. பஞ்சாப் டீமை பிளே-ஆஃப் மட்டும் கூட்டிட்டு போயிடுங்க.


Click it and Unblock the Notifications