Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பஞ்சாப் அசத்தல் பேட்டிங்.. கலக்கிய ஆட்டநாயகன் அஸ்வின்.. ராஜஸ்தானை வீழ்த்தியது! - முழு ரிப்போர்ட்!

மொஹாலி : கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஐபிஎல் லீக் போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது.

2019 ஐபிஎல் தொடரின் 32வது லீக் போட்டி பஞ்சாப் - ராஜஸ்தான் அணிகள் இடையே நடைபெற்றது. இந்த தொடரில் பெங்களூர் அணிக்கு அடுத்து மோசமாக ஆடி வரும் ராஜஸ்தான் அணி, தன் ஆறாவது தோல்வியை பதிவு செய்தது.

பஞ்சாப் ரன் குவிப்பு

பஞ்சாப் ரன் குவிப்பு

ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணிக்கு ராகுல் 52, கிறிஸ் கெயில் 30, மாயங்க் அகர்வால் 26, டேவிட் மில்லர் 40 ரன்கள் எடுத்தனர். கடைசி நேரத்தில் அஸ்வின் 4 பந்துகளில் 17 ரன்கள் சேர்க்க அந்த அணி 20 ஓவர்களில் 182 ரன்கள் குவித்தது.

ஆர்ச்சர் அபாரம்

ஆர்ச்சர் அபாரம்

ராஜஸ்தான் அணியில் ஜோப்ரா ஆர்ச்சர் அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்கள் வீழ்த்தினார். கோபால் விக்கெட் வீழ்த்தாவிட்டாலும், 4 ஓவர்களில் 31 ரன்கள் கொடுத்து ஆர்ச்சருக்கு அடுத்து ரன்களைக் கட்டுப்படுத்தினார்.

ராஜஸ்தான் சறுக்கல்

ராஜஸ்தான் சறுக்கல்

ராஜஸ்தான் அணி 183 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி ஆடியது. அந்த அணி பேட்ஸ்மேன்கள் ராகுல் திரிபாதி 50, பட்லர் 23, சாம்சன் 27, ரஹானே 26 ரன்கள் சேர்த்தனர். கடைசி 5 ஓவர்களில் 61 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்த ராஜஸ்தான் அணி, அதன் பின் விக்கெட்களை வரிசையாக இழந்து தோல்வியை நோக்கி பயணித்தது.

ஸ்டூவர்ட் பின்னி அதிரடி

ஸ்டூவர்ட் பின்னி அதிரடி

கடைசி நேரத்தில் ஸ்டூவர்ட் பின்னி 11 பந்துகளில் 33 ரன்கள் குவித்தார். எனினும், ராஜஸ்தான் அணியால் இலக்கை எட்ட முடியவில்லை. கடைசி ஓவரில் 23 ரன்கள் தேவை என்ற நிலையில், 10 ரன்கள் மட்டுமே எடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

பஞ்சாப் பந்துவீச்சு அசத்தல்

பஞ்சாப் பந்துவீச்சு அசத்தல்

பஞ்சாப் அணியின் பந்துவீச்சு அசத்தலாக இருந்தது. கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் தான் சிறப்பாக வீசி 2 விக்கெட்கள் எடுத்ததோடு, பந்துவீச்சாளர்கள் சுழற்சியையும் சிறப்பாக செய்தார். ஆர்ஷ்தீப் சிங் 2, முருகன் அஸ்வின் 1, ஷமி 2 விக்கெட்கள் வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார் கேப்டன் அஸ்வின்.

Story first published: Wednesday, April 17, 2019, 0:14 [IST]
Other articles published on Apr 17, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+