Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னத்த பேட்டிங் ஆடுறார்? அரைசதம் அடித்த ராகுலை ரவுண்டு கட்டிய ரசிகர்கள்.. ஏன் தெரியுமா?

மொஹாலி : ராஜஸ்தான் ராயல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதிய போட்டியில் பஞ்சாப் வீரர் கே எல் ராகுல் அரைசதம் அடித்தார்.

1
45908

பஞ்சாப் அணி தன் பேட்டிங்கில் 182 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிக ரன் குவித்தவர் ராகுல் தான். எனினும், அவர் பேட்டிங் சரியில்லை என சில தீவிர கிரிக்கெட் ரசிகர்கள் ரவுண்டு கட்டி விமர்சித்து வருகிறார்கள்.

நிதானம்

நிதானம்

அதற்கு காரணம், துவக்க வீரரான ராகுல் முதல் பாதி ஆட்டத்தில் படு நிதானம் காட்டுகிறார். பின்னர் கடைசி நேரத்தில் அடித்து ஆடுகிறார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 110-120-ஐ ஒட்டியே இருக்கிறது. இதற்குத் தான் சில ரசிகர்கள் அவரை விமர்சிக்கிறார்கள்.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

அடித்து ஆட வேண்டிய பவர்பிளே ஓவர்களில் ராகுல் நிதானம் காட்டுவதால், அடுத்து வரும் வீரர்கள் அடித்து ஆட வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகி, தங்கள் விக்கெட்களை இழக்கிறார்கள் என்பதும் முக்கிய குற்றச்சாட்டு. எனவே, ராகுல் அதிக ரன் அடித்தார் என்பதை பெருமையாக கூறமுடியாது என்கிறார்கள் இந்த விமர்சகர்கள்.

ராகுல் ரன் குவிப்பு

ராகுல் ரன் குவிப்பு

ராகுல் இந்த ஐபிஎல் தொடரில் நான்கு அரைசதங்கள், ஒரு சதம் என ரன் குவித்து அசத்தியுள்ளார். 9 போட்டிகளில் 387 ரன்கள் குவித்துள்ளார். ஆனால், அவரது ஸ்ட்ரைக் ரேட் 127 தான். டி20 போட்டிகளில் இது குறைவான ஸ்ட்ரைக் ரேட்டாகவே கருதப்படுகிறது.

விமர்சனம்

விமர்சனம்

ராகுல் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் இடம் பெற்றுள்ளதால், விமர்சனம் மேலும் அதிகரித்துள்ளது. ராகுல் கடந்த ஆண்டு ரன் குவிக்காமல் இருந்து கடும் விமர்சனத்தை சந்தித்தார். தற்போது, ரன் குவித்து அதனால் விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறார். இதெல்லாம் எங்கே போய் முடியப் போகுதோ?

Story first published: Tuesday, April 16, 2019, 23:50 [IST]
Other articles published on Apr 16, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+