Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஓபனிங் ஆடினார்.. இப்ப இடத்தை மாத்துறார்.. கேப்டன்னா இப்படி தான் செய்வாங்களா! சிக்குகிறாரா ரஹானே?

மொஹாலி : ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரஹானே, பஞ்சாப் அணிக்கு எதிராக துவக்க வீரராக களமிறங்கவில்லை. இதை பெரிய விவகாரமாக மாற்றி உள்ளனர் சில ரசிகர்கள்.

ராஜஸ்தான் அணிக்கு இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை துவக்க வீரராக களமிறங்கிய அந்த அணியின் கேப்டன் ரஹானே, பஞ்சாப் அணிக்கு எதிராக நான்காவது பேட்ஸ்மேனாக களமிறங்கினார்.

மாற்றம்

மாற்றம்

2019 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட பின்தான் இந்த மாற்றம் நடைபெற்றுள்ளது என கூறுகிறார்கள் ரசிகர்கள். உலகக்கோப்பைக்கும், ஐபிஎல் போட்டியில் துவக்க வீரராக களமிறங்காமல் போனதற்கும் என்ன தொடர்பு?

வாய்ப்பு இல்லை

வாய்ப்பு இல்லை

ரஹானே இந்திய ஒருநாள் அணியில் இடம் கிடைக்காமல் நீண்ட காலமாக தவித்து வருகிறார். ஐபிஎல் தொடருக்கு முன்பு நடந்த ஆஸ்திரேலிய தொடர் வரை ரஹானேவுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.

ரஹானே கணக்கு

ரஹானே கணக்கு

இந்த நிலையில் ரஹானே, ஐபிஎல் தொடரில் தான் சிறப்பாக ஆடினால், உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறலாம் என கணக்கு போட்டார். அதை பேட்டிகளிலும் கூட கூறியுள்ளார்.

ரசிகர்கள் சொல்வது என்ன?

ரசிகர்கள் சொல்வது என்ன?

இந்திய அணியில் மாற்று துவக்க வீரர் இடத்திற்கு சரியான வீரர்கள் இல்லாமல் இருந்தது. எனவே, அந்த இடத்திற்கு குறி வைத்த ரஹானே, ஐபிஎல் தொடரில் துவக்க வீரராக இறங்கினார். ஆனால், உலகக்கோப்பை அணியில் இடம் இல்லை என்றவுடன், மிடில் ஆர்டருக்கு மாறிவிட்டார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். ரஹானே ராஜஸ்தான் அணிக்கு கேப்டனாக இருக்கலாம், தன் தனிப்பட்ட பலனுக்காக அணியில் பேட்டிங் இடத்தை மாற்றிக் கொள்ளலாமா? எனவும் கேட்கிறார்கள் ரசிகர்கள்.

உண்மையா?

உண்மையா?

ஆனால், அதுதான் உண்மையா? சில கிரிக்கெட் விமர்சகர்கள், ராஜஸ்தான் அணியில் ஸ்டீவ் ஸ்மித் இல்லாத காரணத்தால், மிடில் ஆர்டரை பலப்படுத்த ரஹானே தன் இடத்தை மாற்றிக் கொண்டுள்ளார் என கூறுகிறார்கள். என்ன ரஹானே.. பதில் சொல்லுங்க?

Story first published: Tuesday, April 16, 2019, 23:22 [IST]
Other articles published on Apr 16, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+