For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கே-வுக்கு செம அடி.. ஐபிஎல்-இல் இருந்து கடைசி நேரத்தில் விலகிய இளம் சிஎஸ்கே வீரர்!

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் லுங்கி நிகிடி காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முழு நேர வேகப் பந்துவீச்சாளர்கள் சரியாக இல்லாத நிலையில், நிகிடியின் காயம் அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும்.

திறன் வாய்ந்த லுங்கி நிகிடி

திறன் வாய்ந்த லுங்கி நிகிடி

தென்னாப்பிரிக்க வீரரான லுங்கி நிகிடி கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகம் ஆனார். சென்னை அணிக்கு ஆடிய அவர் 7 போட்டிகளில் 11 விக்கெட்கள் வீழ்த்தி தன் திறனை வெளிப்படுத்தினார். மிகவும் கட்டுக்கோப்பாக பந்துவீசும் திறன் பெற்றவராகவும் திகழ்ந்தார்.

காயம்

காயம்

இந்த நிலையில், இந்த முறையும் ஐபிஎல் தொடரில் கலக்குவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இலங்கை அணிக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இவருக்கு காயம் ஏற்பட்டது.

ஓய்வு

ஓய்வு

காயத்தின் வீரியத்தை பரிசோதித்த பின் தென்னாப்பிரிக்க அணி இவரை அடுத்த நான்கு வாரங்களுக்கு ஓய்வில் இருக்குமாறு கூறியுள்ளது. அதன் பின் உலகக்கோப்பை தொடருக்கு ஒரு மாதம் மட்டுமே உள்ளது என்பதால், அவர் ஐபிஎல் தொடர் முழுவதும் ஆட மாட்டார் என கூறப்படுகிறது.

மற்ற பந்துவீச்சாளர்கள்

மற்ற பந்துவீச்சாளர்கள்

சென்னை அணியில் தற்போது முழு நேர வேகப் பந்துவீச்சாளர்களாக மோஹித் சர்மா, தீபக் சாஹர், ஷர்துல் தாக்குர் ஆகியோர் மட்டுமே உள்ளனர். எனினும், இவர்களைக் காட்டிலும் லுங்கி நிகிடி ஆதிக்கம் செலுத்தும் பந்துவீச்சாளராக விளங்கினார்.

பிராவோ, வாட்சன்

பிராவோ, வாட்சன்

எனவே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தற்போது, பிராவோ, வாட்சன் போன்ற ஆல்-ரவுண்டர்களை தான் சென்னை அணி பெரிதும் நம்ப வேண்டிய நிலையில் இருக்கிறது.

அன்றிச் மோர்ஜே காயம்

அன்றிச் மோர்ஜே காயம்

லுங்கி நிகிடி போலவே, மற்றொரு தென்னாப்பிரிக்க வீரர் அன்றிச் மோர்ஜே-வும் இலங்கை தொடரில் காயமடைந்துள்ளார். அவர் கொல்கத்தா அணிக்காக ஐபிஎல் தொடரில் ஆட இருந்த நிலையில், தற்போது தொடரில் இருந்து மொத்தமாக விலகி உள்ளார்.

Story first published: Thursday, March 21, 2019, 10:39 [IST]
Other articles published on Mar 21, 2019
English summary
IPL 2019 : Lungi Ngidi and Anrich Nortje got injured and ruled out
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+