எனக்காக காத்திருப்பது வேஸ்ட்.. வேற ஆளை பார்த்துக்குங்க.. மும்பை இந்தியன்ஸ்-க்கு பைபை சொன்ன மலிங்கா!
மும்பை : ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் வீரர் லசித் மலிங்கா உள்ளூர் போட்டி ஒன்றில் ஆட இருப்பதால், முதல் சில வாரங்களுக்கு ஐபிஎல் தொடரில் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கை அணியின் கேப்டனாக இருக்கும் மலிங்கா, உலகக்கோப்பை தொடருக்கு தயாராக வேண்டி இலங்கையில் நடைபெறும் உள்ளூர் ஒருநாள் தொடரில் விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

தடையில்லா சான்றிதழ்
மலிங்கா ஐபிஎல் தொடரில் ஆடுவதற்காக இலங்கை கிரிக்கெட் போர்டிடம் தடையில்லா சான்றிதழ் கேட்டுள்ளார். அதற்கு தாரளமாக ஐபிஎல் தொடரில் ஆடலாம். ஆனால், உலகக்கோப்பைக்கு செல்ல வேண்டும் என்றால் உள்ளூர் ஒருநாள் தொடரில் ஆட வேண்டும் என கூறியுள்ளனர்.

கூறிவிடுங்கள்
அந்த குறிப்பிட்ட உள்ளூர் தொடர் வரும் ஏப்ரல் 4 முதல் ஏப்ரல் 11 வரை நடைபெற உள்ளது. இதையடுத்து மலிங்கா, இந்த முடிவை மும்பை இந்தியன்ஸ் அணியிடமும், ஐபிஎல் நிர்வாகத்திடமும் கூறி விடுமாறு தெரிவித்துள்ளார்.

ஆறு போட்டிகள்
தான் நாட்டுக்காக ஐபிஎல் வருமானத்தை இழக்கவும் தயார் என அறிவித்துள்ளார் மலிங்கா. இந்த ஒருநாள் தொடர் முடிவடைவதற்குள் ஆறு போட்டிகள் வரை மும்பை இந்தியன்ஸ் அணி ஆடி முடித்து விடும்.

மாற்று வீரர்
மேலும், உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சியில் ஈடுபட மே மாத துவக்கத்தில் இருந்து அவர் மீண்டும் ஐபிஎல் தொடரில் இருந்து விலக நேரிடும். எனவே, தனக்காக மும்பை அணி காத்திருப்பதில் அர்த்தமில்லை. தன்னை விட்டு விட்டு மாற்று வீரரை அவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார் மலிங்கா.


Click it and Unblock the Notifications