Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நீங்க அப்படி செஞ்சீங்க.. அதான் நாங்க இப்படி பண்றோம்! இந்தியாவை பழிக்குப்பழி வாங்கும் பாக்.

இஸ்லாமாபாத் : 2019 ஐபிஎல் தொடரின் ஒளிபரப்பு பாகிஸ்தான் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விளக்கம் அளித்த பாகிஸ்தான் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பாவாத் சௌத்ரி, இந்தியா திட்டமிட்டு பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு தீங்கு விளைவித்தது என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல் தொடரை, இந்தியாவை பழிவாங்கும் நோக்கில் தடை செய்துள்ளது பாகிஸ்தான் அரசு.

பாதியில் நிறுத்தம்

பாதியில் நிறுத்தம்

அதற்குக் காரணம், காஷ்மீர் புல்வாமா தீவிரவாத தாக்குதலின் எதிரொலியாக பாகிஸ்தான் சூப்பர் லீக் எனும் பாகிஸ்தான் நாட்டு டி20 கிரிக்கெட் தொடரின் ஒளிபரப்பு இந்தியாவில் நிறுத்தப்பட்டது. அந்த தொடரை தயாரித்து வந்த இந்திய நிறுவனம், தன் பணிகளை தொடரின் பாதியிலேயே நிறுத்திக் கொண்டது.

பழிக்குப்பழி

பழிக்குப்பழி

இதனால், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு சிக்கலில் ஆழ்ந்தது. அந்த சம்பவங்களுக்கு பழி தீர்க்கும் வகையில் தான் இந்தியாவின் ஐபிஎல் தொடர் ஒளிபரப்புக்கு தங்கள் நாட்டில் தடை விதித்துள்ளது பாகிஸ்தான் அரசு.

இந்தியா தீங்கு விளைவித்தது

இந்தியா தீங்கு விளைவித்தது

இதற்கு விளக்கம் அளித்த பாகிஸ்தான் அமைச்சர், "இந்தியா திட்டமிட்டு பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு தீங்கு விளைவித்தது. அதனால், இந்திய உள்ளூர் கிரிக்கெட்டை இங்கே வளர்க்க அனுமதிக்க முடியாது" என கூறினார்.

குறுக்கு வழியில் ரசிகர்கள்

குறுக்கு வழியில் ரசிகர்கள்

பாகிஸ்தான் அரசு ஐபிஎல்-லுக்கு தடைவிதித்தாலும், பாகிஸ்தான் ட்விட்டரில் ஐபிஎல் போட்டிகள் தினமும் ட்ரென்ட்டாகி வருகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் குறுக்கு வழிகளில் ஐபிஎல் தொடரை பார்த்து வருகிறார்கள்.

Story first published: Wednesday, April 3, 2019, 13:36 [IST]
Other articles published on Apr 3, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+