For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ராகுல் ரொம்ப ஸ்வீட்.. அவருக்கு போய் இப்படி நடந்துடுச்சே.. சொன்னது யார் தெரியுமா?

மொஹாலி : இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் சில மாதங்களுக்கு முன்பு பெண்கள் குறித்து அவதூறாக பேசிய சர்ச்சையில், சக வீரர் ஹர்திக் பண்டியாவுடன் சிக்கினார்.

அதற்காக சில வாரங்கள் தடையிலும் இருந்தார் ராகுல். பின்னர், தடை தற்காலிகமாக நீக்கப்பட்டு தொடர்ந்து ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்றார். தற்போது, ஐபிஎல் தொடரில் பங்கேற்று வருகிறார்.

ஸ்வீட் ராகுல்

ஸ்வீட் ராகுல்

2019 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக ஆடும் ராகுல், சர்ச்சை பேச்சு விவகாரத்தில் அந்த அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ப்ரீத்தி ஜிந்தாவின் ஆதரவை பெற்றுள்ளார். "உண்மையில், ராகுல் பெண்களிடம் "ஸ்வீட்டாகவும், மரியாதையாகவும்" நடந்து கொள்கிறார்" என கூறியுள்ளார் ப்ரீத்தி ஜிந்தா.

நல்ல மனிதர்

நல்ல மனிதர்

மேலும், "ராகுல் பார்முக்கு திரும்பியது நல்ல விஷயம். அவர் மிகவும் நல்ல மனிதர். கடந்த காலத்தில் நடந்தவற்றுக்காக நான் வருந்துகிறேன். ஆனால், நாம் வாழவும், கற்றுக் கொள்ளவும் வேண்டும்" என்று ராகுலுக்கு ஆதரவாக பேசினார்.

ஆட்டம் எப்படி?

ஆட்டம் எப்படி?

ராகுல் பஞ்சாப் அணிக்காக நான்கு போட்டிகளில் ஆடி 91 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு போட்டியில் மட்டுமே 71 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற போட்டிகளில் சொற்ப ரன்களே எடுத்தார்.

பிசிசிஐ விசாரணை

பிசிசிஐ விசாரணை

ப்ரீத்தி ஜிந்தா ராகுலுக்கு ஆதரவு தெரிவித்தாலும், சர்ச்சை பேச்சு விவகாரம் குறித்து பிசிசிஐ சார்பில் விசாரணை நடத்தப்பட உள்ளது. அதில் தான் ராகுல், ஹர்திக் பண்டியா - இருவருக்கும் என்ன தண்டனை கொடுக்கப்படும் அல்லது இந்த விவகாரம் கைவிடப்படுமா என்பது தெரிய வரும்.

Story first published: Saturday, April 6, 2019, 19:28 [IST]
Other articles published on Apr 6, 2019
English summary
IPL 2019 : Preity Zinta says KL Rahul is respectful towards woman
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+