Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

VIDEO : என்னப்பா இந்த ஓட்டு ஓட்டுறீங்க.. வடிவேலு லிப் சிங்க்கில் பேசும் கோலி.. செம கலாய் வீடியோ!!

Recommended Video

வடிவேலு லிப் சிங்க்கில் பேசும் கோலி.. செம கலாய்!!-வீடியோ

பெங்களூர் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 2019 ஐபிஎல் தொடரில் படு மோசமான நிலையை எட்டி உள்ளது. தான் ஆடிய முதல் ஆறு போட்டிகளில் தொடர்ந்து தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.

இந்த நிலையில், மற்ற அணிகளின் ரசிகர்கள் பெங்களூர் அணியை செமயாக கலாய்த்து வருகிறார்கள். நம் தமிழ் மீம் பாய்ஸ்-ஐ பற்றி கேட்கவே வேண்டாம். விராட் கோலியை பயங்கரமாக ஓட்டி ஒரு வீடியோ வேகமாக பரவி வருகிறது.

அடி வாங்காத டீம்

அடி வாங்காத டீம்

அந்த வீடியோவில் எப்போதும் போல மீம் பாய்ஸ்-இன் குருவான வடிவேலுவின் டயலாக்கை வைத்து தான் கோலியை கிண்டலடித்துள்ளார்கள். போட்டிக்கு பின் கோலியை பேட்டி எடுக்கும் பிரெட் லீ. "நீங்க அடி வாங்காத டீம் எதுவும் இருக்கா?" என கேட்கிறார்.

சத்தமே வராது.. ஓடுனதும் கிடையாது

சத்தமே வராது.. ஓடுனதும் கிடையாது

அதற்கு வடிவேலு வாய்ஸில், "போங்க தம்பி.. ஊருக்குள்ள போய் கேட்டுப் பாருங்க.. நாங்க அடிவாங்காத ஏரியாவே கிடையாது. எவ்வளோ அடி வாங்கினாலும் சத்தமே வராது. ஓடுனதும் கிடையாது" என செம லிப் சிங்க்'கில் பதில் சொல்கிறார் கோலி.

ஆறு தோல்வி

ஆறு தோல்வி

இந்த சீசனில் இதுவரை ஆறு போட்டிகளில் ஆடியுள்ள பெங்களூர் அணி ஆறு அணிகளிடம் தோல்வி அடைந்துள்ளது. இன்னும் பஞ்சாப் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் கூட பெங்களூர் அணி ஆடவில்லை. எனவே, அந்த அணியிடம் மட்டுமே தோல்வி அடையாமல் உள்ளது.

படுதோல்விகள் அதிகம்

படுதோல்விகள் அதிகம்

சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத், மும்பை, ராஜஸ்தான் டெல்லி என ஆறு அணிகளிடம் தோல்வி அடைந்துள்ள, பெங்களூர் அணி, இதில் இரண்டு போட்டிகளில் மட்டுமே போராடி தோற்றது. சென்னை அணிக்கு எதிராக 70 ரன்கள் மட்டுமே எடுத்தது, ஹைதராபாத் அணிக்கு எதிராக 118 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது என படுதோல்விகள் தான் அந்த அணிக்கு அதிகம்.

Story first published: Wednesday, April 10, 2019, 16:01 [IST]
Other articles published on Apr 10, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+